Breaking News

புதிய BSNL ப்ராட்பேண்ட் இணைப்பு எடுக்கப் போறீங்களா?

நிர்வாகி
0
மாதக் கட்டணம் குறைவாக இருக்கிறதே என்று 250 Home Plan மட்டும் எடுத்து விடாதீர்கள். அப்படி எடுத்தால் ஆயிரக்கணக்கில் தண்டம் இழக்க வேண்டி வரும்.

எப்படி என்கிறீர்களா?

1GB Download unlimited Browsing என்றுக் கூறப்படும் மேற்படி 250 Home Plan-ல் அறிவிக்கப்படாத கட்டணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். நாம் துவங்கும் ப்ரோஸிங் நேரத்திலிருந்தே அவர்களின் கணக்கீடும் துவங்கிவிடும். இதை சாமானியர்கள் அறிவதில்லை. BSNL ஊழியர்களும் இணைப்பு வேண்டி விண்ணப்பிப்போர் யாரிடமும் இதுபற்றி வாய் திறப்பதில்லை.

இதை அறியாமல் ரூபாய்.2000 முதல் 6000 வரை பில் வரும்போது வியந்து அசந்துபோய் அமர்ந்தவர்கள் ஏராளம். சிலர் இணைப்பைத் துண்டித்தும் விட்டார்கள்.

இதற்கு என்ன மாற்று வழி?

750 Unlimited Home Plan-ற்கு விண்ணப்பிப்பதுதான் சிறந்த வழி. எவ்வளவு பயன் படுத்தினாலும் எப்படி Download/Upload செய்தாலும் ரூபாய்.750-கு மேல் பில் வராது.

Tags: ஆலோசனை BSNL

Share this