Breaking News

K-Tic: Stage Speech - 4th Workshop / 4வது சொற்பொழிவு பயிலரங்கம்

நிர்வாகி
0
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 4வது சொற்பொழிவு பயிலரங்கம்

பேரன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும், வாய்ப்புகளை வளமாக்க வேண்டும் என்ற நினைப்பும், பேச்சும் எழுத்தும் உயிர்மூச்சு என வாழ்ந்தாலும்.. அவற்றை மேம்படுத்த சரியான பயிற்சி இல்லையே என்ற ஏக்கமும் உடைய அன்பர்களுக்காக.. அவர்களின் முன்னேற்றத்திற்காக.. உள்ளத்தில் நினைப்பதை செயல்வடிவில் கொண்டு வரவும், சொற்பொழிவின் முறைகளை அறிந்து கொள்ளவும் குவைத் தமிழ் வரலாற்றில் முதன்முறையாக எந்நாட்டை சேர்ந்த தமிழறிந்த 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மட்டும் தமிழ் மொழியிலிலேயே சொற்பொழிவு மற்றும் மேடைப்பேச்சு குறித்த தெளிவான பயிற்சிக்களமாக... கடந்த 23.07.2009 (ஹிஜ்ரீ 1430 ஷஃபான் பிறை 1) வியாழக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து இரவு 11:30 மணி வரை குவைத், ஸால்மியா பகுதியில் உள்ள சங்கத்தின் துணைப் பொருளாளர் 'அல்ஹாஜ் எஸ்.எம்.எம். அபூதாஹிர்' இல்லத்தில் குவைத் இந்திய தூதரகத்தில் பதிவு பெற்ற அமைப்பான 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்த '4வது சொற்பொழிவு பயிலரங்கம்' நடைபெற்றது.

அல்ஹம்து லில்லாஹ்...

சங்கத்தின் துணைத் தலைவரும், குவைத் காயிதே மில்லத் பேரவை(குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)யின் அமைப்பாளருமான திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்பயிலரங்கத்தை சங்கத்தின் இதழியல் குழு உறுப்பினர் காயல் பட்டணம் ஆலி ஜனாப் ஏ. ஹாமித் அபூ மாஜின் பி.ஏ., திருமறை குர்ஆன் வசனங்களை கிராஅத் ஓதி, வாழ்த்துக் கவிதை வாசிக்க, சங்கத்தின் இணை பொதுச் செயலாளர் சென்னை அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் பி.ஏ., வரவேற்புரையாற்ற பயிலரங்க நிகழ்ச்சி இனிதே துவங்கியது.

இச்சிறப்புமிகு பயிலரங்கத்தில் தலைவரின் சிறப்பான தலைமையுரைக்கு பின், சங்கத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் சேலம் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைஃக் எம். மஹ்பூப் பாஷா ரஷாதி சொற்பொழிவு மற்றும் மேடைப்பேச்சின் இலக்கணங்களையும், நுணுக்கங்களையும் உள்ளடக்கிய பயிற்சியை கலந்து கொண்டோருக்கு அளித்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதுடன், சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும், இப்பயிலரங்கத்தின் நோக்கங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் இணைப் பொருளாளர் புத்தாநத்தம் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்ற, அஷ்ஷைஃக் எம். மஹ்பூப் பாஷா ரஷாதி துஆவுடன், இரவு உணவுடனும் இரவு 11:30 மணிக்கு பயிலரங்கம் இனிதே நிறைவுற்றது.
அல்ஹம்து லில்லாஹ்...

குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் பலரும் இயக்க, அமைப்பு வேறுபாடின்றி பங்கேற்று குறிப்பாக, சங்கத்தின் துணைச் செயலாளர் அய்யம்பேட்டை அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் எம்.ஏ., எருமைப்பட்டி எஸ். அப்துல் கஃபூர், வல்லம் ஏ. இஸ்மாயீல், பெரம்பலூர் ஏ. குலாம் முஹம்மது, கூத்தாநல்லூர் எஸ்.எம். அன்வர், அத்திக்கடை ஏ.ஜே. பஷீர் அஹ்மது, பூலாம்பாடி எம்.ஏ. முஹம்மது, பனைக்குளம் ஏ. அர்ஷத் அலீ மற்றும் ஷேக் யூஸுஃப் ஹுஸைன் ஆகியோர் தங்களின் மேடைப்பேச்சு மற்றும் சொற்பொழிவு திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். இச்சிறப்பு மிகு பயிலரங்கத்தில் குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு பயன் மற்றும் பயிற்சி பெற்றமை, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமின்றி இன்னும் இதுபோன்ற பயனுள்ள பல பயிலரங்கங்களை அதிகமதிகம் நடத்த வேண்டும் என்ற பேராவலையும் தூண்டி விட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்... சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கு சங்கத்தின் துரித சேவை அலைபேசி எண் (+965) 97 87 24 82 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும், மேலதிக செய்தி களுக்கும், நிகழ்ச்சியின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கும், அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸஸலாம்.
செய்தி: தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82 மின்னஞ்சல்கள்: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com இணையதளம்: www.k-tic.com யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
குறிப்பு : இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Tags: குவைத் k-tic

Share this