Breaking News

லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இஃப்தார் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ப்பு!!!

நிர்வாகி
0
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைப் பெற்றது.

நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் கே.ஏ.முஹம்மது தலமை வகித்தார். அபுதாபி அய்மான் சங்க செயளாலரும்,முஸ்லிம் லீக் பதிப்பகக் குழு உருப்பினருமான ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வரவேற்றார்.

மாநில மார்க்க அணிச் செயளாலர் மவ்லவி தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான்,கடலூர் மாவட்டத் தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஏ.அப்துல் கஃப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயளாலர் எ.சுக்கூர்,விழுப்புரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயளாலர் ஏ.அன்வர் பாஷா,மாநில பட்டதாரிகள் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ரஷீத் ஜான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில்,ஜெ.எம்.ஏ.கல்லூரியின் செயளாலர் அல்ஹாஜ் ஏ.எம்.ஜாஃபர்,பொருளாலர் ஹாஜி ஏ.ஜே.அஹமதுல்லாஹ்,பேரூராட்சி மன்றத் தலைவர் ஹாஜி ஏ.ஆர்.சபியுல்லாஹ்,கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் துணைத் தலைவர் ஹாஜி எம்.ஏ.ஜெகரிய்யா,கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் பி.முட்லூர் அப்துல் கஃப்பார்,நகை மாவட்ட் முஸ்லிம் லீக் துணைச் செயளாலர் ஹாஜி முஹம்மது பஷீர்,சிதம்பரம் நகர முஸ்லிம் லீக் தாஜுத்தீன் லால்பேட்டை ,முஸ்லிம் ஜமாஅத் செயளாலர் ஹாஜி எம்.ஏ.ஃபத்தஹுத்தீன்,மாவட்ட முஸ்லிம் லீக் துணைச் செயளாலர் ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ்,நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகளான மஸூத் அஹ்மத்,பி.எம்.தய்யிப்,ஜாஃபர் அலி,அப்துல் காதர்,எம்.ஓ.அப்துல் அலி,மவ்லவி நூருல் அமீன்,சல்மான் ஃபாரீஸ், மற்றும் த.மு.மு.க, தேசிய லீக்,காங்கிரஸ்,தி.மு.க.மேலும் அனைத்துப் பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள், பேரூராட்சி மன்ற உருப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிவில் அபுதாபி காயிதே மில்லத் பேரவை உருப்பினர் என்.ஹெச்.முஜீபுர் ரஹ்மான் நன்றி கூறினார்.இறுதியாக கோட்டக் குப்பம் மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி அல்ஹாஜ் ஏ.ஃபைஜுர் ரஹ்மான் மதனி துஆ ஓதினார்.


Tags: இஃப்தார் முஸ்லிம் லீக் லால்பேட்டை

Share this