லால்பேட்டையில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்ப்பு!!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPiEheoNl_CbdvAQpHoJCxZVFEiDlqn_vCvm44GXN3rcnaxUNSGhVnPY2S814gEWvrdlZC4fUQHCf1b8-x1X1Jua-sahWNKvVwNXbJG5_JS8YCXdnO1JgfmYuA0YNEMkgoSMS6wfYvjgU/s400/Image007.jpg)
லால்பேட்டை ஈத்கா குத்பா பள்ளிவாசலில் காலை 8 மணியளவில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.அவ்வமயம் தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மொளலானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் சிரப்புரையாற்றினார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3AsLy7OVsH8Ex72bb6n2deNFPYVIc6UvZ4JaOMpX_4y3W99PSaJLOtYjlfvSdp3jNlTwmdZB9RZusbJL9od8SMeXF22uiFdibCzenB0dS5yX2mskh-33bjtqBWIUkufi0PAENr8wwUEo/s400/Image009.jpg)
ஜெ.எம்.ஏ.அரபிக்கால்லூரி முதல்வர் மொளலானா ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் பெருநாள் தொழுகை நடத்தினார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRZr01RbhRXNV9mgfVQ63ft2VtXWTbFbBuOF1jed7BLEJ0usd8tw4YXkpgTFuyCydqemWphQHWlIAAvktFyOjfqweywjQpGz0FSdChGlDMlEuUQtzZwlUhFg0o8HYPa46bfzP5B6_GgQc/s400/Image010.jpg)
இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துக் கொண்டனர்.காலை 6 மணியிலிருந்தே லால்பேட்டையிலுள்ள அனைத்து மஸ்ஜிதுகளிலிருந்தும் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடையணிந்து அணி அணியாக பெரியவர்களும்,இளைஞர்களும்,சிறுவர்களும் ஆர்வபெருக்குடன் கலந்துக் கொண்டனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxfnjCE8S9UPTgqLwxAd_6sjlN4Qnx8LPo-vCFNzjW2lRi55-VHgUbYEHlWQTaEDQngzRpnpuABYB5ozjK3oKHDQN-l_T1JB1AhQSMJghseE7tXlivtIHGwdW4jmNZov6V3_mnnaJPDzA/s400/Image012.jpg)
தொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும்,அனைவரின் நல்வாழ்வுக்காகவும்,நலனுக்காகவும்,சமுதாய ஒற்றுமைக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgomBxeNSs2_zlRdLCE7WfE3JSxsZuwBGVfcQXK7B41wtpHrc_x8G3TQefziVT2uJzA40t-uTvQ5NEEYTK-IXzTWkWeVl0S9Ix43B_1KfPg5BKtmS5RVfNIEdZUyAt2ar7z2o_n-Yg83qU/s400/Image013.jpg)
மேலும் ஊரின் செழிப்பான,சிறப்பான முனேற்றத்திற்க்காகவும் துஆச் செய்யப்பட்டது.பிரார்த்தனைக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்து கரம் கொடுத்து ஆரத் தழுவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தகவல் மற்று படங்கள்:
இப்னு ஷஃபீக்