Breaking News

அருள்மறை குர்ஆனுக்கு ஓர் அற்புதமான இணையதளம்

நிர்வாகி
0
•திருமறை குர்ஆனின் மொழியாக்கத்தை உலகின் புகழ் பெற்ற 35க்கும் மேற்பட்ட மொழிகளில் படிக்க விரும்புகிறீர்களா?

இதோ உங்களுக்காக ஓர் அற்புதமான இணைய தளம்

•அத்தியாயம் வாரியாக

•பகுதி வாரியாக

•பக்கம் வாரியாக

•வசன எண் வாரியாக

உங்கள் விருப்பம் போல் வசனங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்

அரபி எழுத்துருக்களை உங்கள் விருப்பத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்

எழுத்து அளவையும் உங்கள் விருப்பத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்

உலகின் 35க்கும் மேற்பட்ட மொழிகளில் உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்து கொண்டு அரபி மொழி வசனங்களில் உங்கள் மவுஸை நகர்த்தினால் போதும் அந்தந்த மொழிகளில் திருமறை குர்ஆனின் மொழி பெயர்ப்பு உங்களை அசத்தி விடும்.

திருமறை குர்ஆனின் தேன்மதுர கிராஅத்தை உலகின் புகழ்பெற்ற பல்வேறு அறிஞர்களின் குரல் வளத்தில் கேட்க வேண்டுமா?

22 மார்க்க அறிஞர்களில் உங்களுக்குப் பிடித்தமான அறிஞரைத் தேர்வு செய்து அவர்களின் அருமையான குரல் வளத்தில் அல்லாஹ்வின் திருமறையை கேட்டு இன்புறுங்கள்.

மாஷா அல்லாஹ் இத்துனை அற்புதங்களையும் ஒரே இடத்தில் குவித்து வைத்து இணையத்தில் இறைமறை குர்ஆனை எழிலுடன் வடிவமைத்தவர்களை இதயத்தால் வாழ்த்துவதுடன் இவர்களுக்காக துஆவும் செய்வோம்.

இத்தளத்திற்குச் செல்ல இங்கே கிளிக்கவும்.


அதிரை POST

Tags: திருக்குர்ஆன்

Share this