Breaking News

புதுவையில் முதல்வர் வீடு முற்றுகை: TNTJ அறிவிப்பு!

நிர்வாகி
0
கல்வி வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட வருவது போல் புதுவை மாநிலத்திலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.



தமிழகத்திலும் புதுவையிலும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஜனவரி 29 2006 ல் கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் பேரணி நடத்திய பின்னர் புதுவை சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 6.1 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு அளிப்பதாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஆனால் இந்த தீர்மானம் இதுவரையிலும் சட்டமாக்கப்படவில்லை. இந்த போக்கை கண்டித்தும் புதுவையில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கோரியும் வருகின்ற 3-5-2010 அன்று புதுவை முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.


புதுவையில் 28-4-2010 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இதை அறிவித்தார்கள்.

Tags: ததஜ

Share this