2010-ம் ஆண்டிற்கான ஹஜ் புனித பயணத்திற்காக 2,792 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்
நிர்வாகி
0
தமிழ்நாட்டில் இருந்து 2010-ம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் செய்வோருக்கான குலுக்கல் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், 2,792 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
ஹஜ் பயணம் குலுக்கல்
தமிழ்நாட்டில் இருந்து 2010-ம் ஆண்டிற்கான ஹஜ் புனித பயணம் செய்ய விண்ணப்பித்திருந்தவர்களை தேர்வு செய்வதற்கான குலுக்கல் சென்னையில் நேற்று நடைபெற்றது.
ராயப்பேட்டை புதுக்கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த குலுக்கலுக்கு தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவர் பிரசிடென்ட் அபுபக்கர் தலைமை தாங்கினார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலாளர் டி.என்.ராமநாதன், அப்துல் ரகுமான் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த குலுக்கலில் தமிழ்நாடு ஹஜ் குழு உறுப்பினர் மற்றும் செயல் அலுவலர் கா.அலாவுதீன், தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொஸைட்டியின் கவுரவ செயலாளர் முகமது அப்சல், உறுப்பினர்கள் திருப்பூர் சத்தார், ஆரிப், சுலைமான் பாட்சா, நவாப்ஜாதா முகம்மது ஆசிப் அலி, ஹசன் அலி எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவர் பிரசிடென்ட் அபுபக்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2,792 பேர் தேர்வு
தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்வதற்காக 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், தமிழ்நாடு ஒதுக்கீடாக 2,792 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த குலுக்கல் `ஆன் லைன்' முறையில் எந்தவித ஒளிவுமறைவின்றி நடத்தப்பட்டது.
3 ஆண்டுகள் தொடர்ச்சியாக விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாத ஹஜ் பயணிகள் 2010-ம் ஆண்டில் விண்ணப்பித்து இருந்தால், அவர்களை குலுக்கல் இன்றி நேரடியாக சிறப்பு வகையின் கீழ் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற மத்திய ஹஜ் குழுவின் வழிமுறைகளின்படி, 202 பேர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இணையதளத்தில் பார்க்கலாம்
குலுக்கல் முடிவுகளை விண்ணப்பதாரர்கள் ஹஜ்கமிட்டி என்ற இணைய தளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்டவர்கள் அக்டோபர் மாதம் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ளனர். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி சீரும் சிறப்புமாக எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும், ஹஜ் பயணத்திற்காக தமிழக அரசு 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மானியமும் ஒதுக்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.