Breaking News

லால்பேட்டையில் தலைவர் பேராசிரியருக்கு உற்சாக வரவேற்பு

நிர்வாகி
0
கடலூர் மாவட்டம் லால்பேட்டை வருகை தந்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுககு நகரெங்கும் உறசாக வரவேற்பளிககபபடடது.

சிதம்பரம் ரயில் நிலை யத்தில் அதிகாலை 4 மணிக்கு லால்பேட்டை இளைஞர் அணி அமைப்பாளர் மவ்லவி ஏ. நூருல் அமீன்,மாணவரணி அமைப்பாளர் சல்மான பாரிஸ், ஏ.எஸ்.அஹமது உள்ளிட்ட இயக்க முன்னோடிகள் தலைவருக்கு வரவேற்பளித்தனர்.

காலை 10 மணிக்கு லால்பேட்டை அரசினர் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை தலைவர் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து லால்பேட்டை நகரின் பல்வேறு இடங்களில் பச்சிளம் பிறைக்கொடிகளை ஏற்றி வைத்தார்.

பின்னர் அண்மையில் காலமான கடலூர் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் ஏ.எம். பாருக் ஹாஜியார் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார்.
காலம் சென்ற பாரூக் ஹாஜியாரின் சகோதரரும், ஜே.எம்.ஏ. அரபிக் கல்லூரி யின் செயலாளரும், நகர முஸ்லிம் லீக் பொருளாளருமான ஏ.எம். ஜாபர் ஹாஜியார் மற்றும் குடும்பத்தார் இதில் கலந்து கொணடனர்.

பேரூராட்சி தலைவர் இல்லத் திருமணம
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பிரமுகர் எம்.ஏ.ஹஜ்ஜு முஹம்மது புதல்வி ஹசூரா பானு மணாளிக்கும், மவ்லானா அப்துல் அஜீஸ் ரபீக் ஷா நூஹ் புதல்வர் சதக்கத் துல்லா மணாளருக்கும் நடைபெற்ற திருமணத்தில் பேராசிரியர் வாழ்த்துரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து லால்பேட்டை பேருராட்சி மன்றத்தலைவர் ஏ.ஆர். சபியுல்லா பேத்தியும், முஸ்லிம் லீக் ஊழியர் எம். இ. காஜா மொய்தீன் புதல்வியுமான செல்லக் கனி மணாளிக்கும், முஸ்லிம் லீக் ஊழியர் ஏ.ஆர். ஜாபர் அலி புதல்வர் ஆரிபுல்லாஹ் மணாளருக்கும், காட்டுமன்னார்குடி ரம்ஜான் தைக்கா ஏ.ஆர்.ஸ். திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

தமிழக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநிலச் செயலாளர் தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் வரவேற்று பேசினார். மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஸரத், துணைத்தலைவர் மவ்லானா எஸ்.ஏ.அப்துல் ரப்பு, ஜே.எம்.ஏ. அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லானா ஏ. நூருல் ஹமீன், லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபிக் கல்லூரி தலைவர் மவ்லானா ஏ. பைஸ{ர் ரஹ்மான், பேராசிரியர்கள் மவ்லானா வி.ஆர். அப்துஸ் ஸமத், பைஜுர் ரஹ்மான், மவ் லானா அப்துல் மாலிக், மவ்லானா அப்துல் பாருக், கடலூர் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.ஏ.அப்துல் கப்பார், செயலாளர் விருத்தாசலம் சுக்கூர், லால்பேட்டை நகரத் தலைவர் கே.ஏ. முஹம்மது, செயலாளர் எம்.ஓ.அப்துல் அலி, பொருளாளர் ஏ.எம். ஜாபர், மாவட்ட துணைச் செயலாளர் கே.ஏ.அமானுல்லா, இளைஞரணி அமைப்பாளர் ஏ. நூருல் ஹமீன், மாணவர் அணியைச் சேர்ந்த யு சல்மான் பாரிஸ், ஏ. அஹமது மற்றும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

Tags: முஸ்லிம் லீக் லால்பேட்டை

Share this