Breaking News

குவைத்தில் மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள் - Twin Program on “Isra’a & Mi'raj” – Conference by K-Tic

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
0
மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்!
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாபெரும் விண்ணுலக யாத்திரையின் நினைவாக குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற ஒரே தமிழ் இஸ்லாமிய அமைப்பான 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'மாபெரும் இஸ்ரா ஃ மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்'...

'அண்ணல் நபியின் விண்ணுலக பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!!' என்ற கருப்பொருளில் கீழ்க்கண்ட முறையில் இரண்டு இடங்களில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.

முதல் நாள் நிகழ்ச்சி:

இன்ஷா அல்லாஹ் 08.07.2010 வியாழக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல், கத்ஆ 7, பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா) பள்ளி' பள்ளிவாசலில் நடைபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்... சங்கத்தின் கொள்கை பரப்புக் குழு உறுப்பினர் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ, பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைஃக் எம். மஹ்பூப் பாஷா ரஷாதி மற்றும் சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எச்.எம். அப்துர் ரஹ்மான் மழாஹிரி ஆகியோர் இஸ்ரா, மிஃராஜ் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா குறித்த முழுமையான வரலாறு போன்ற தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி:

இன்ஷா அல்லாஹ் 09.07.2010 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா பள்ளி - KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் நடைபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்... சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு மூத்த உறுப்பினர்கள் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ, மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் எம்.டி.எம். அஜ்வத் ரைவின்தி லாஹூரி (இலங்கை) மற்றும் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எஃப். ஷேக் தாவூத் ஸிராஜி ஆகியோர் இஸ்ரா, மிஃராஜ் நிகழ்வின் அன்பளிப்பு, இஸ்லாமியர்களின் கடமைகள் போன்ற தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

இரண்டு நிகழ்ச்சிகளிலும் இஸ்லாமிய பொது அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

சங்கத்தின் செயல் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிற்றுரையாற்றுவார். துஆவுடன் இரண்டு நிகழ்ச்சிகளும் இன்ஷா அல்லாஹ் இனிதே நிறைவுபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்வுகளில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

“ Kuwait Tamil Islamic Committee (K-Tic)” arranges "Twin Program on “Isra’a & Mi'raj” – Conference in Tamil"

Kuwait Tamil Islamic Committee (K-Tic), a non-profit socio welfare organization of Tamil speaking Muslim community in Kuwait, (established in 2006 - registered with Indian Embassy of Kuwait and also with Administration of Grand Mosque, Kuwait Ministry of Awqaf and Islamic Affairs).

K-Tic has a impressive name among the socio-welfare organizations in Kuwait and Gulf countries whose benevolent works and enlightening activities and conserving Islamic uniqueness and also well known with the thousands of Indians especially all Tamil speaking people in Kuwait.
K-Tic arranges twin program on “Isra’ & Mi'raj” - Conference in Tamil Language.

Program 1:

Date : Insha Allah July 8, 2010 Thursday @ 6:30pm (after Maghrib Prayer)
Venue: Fahaheel - Masjid Majeed Al Hilal Al Othaibee, Urdu Quthba Masjid, Behind Gulf Mart / Green Tower.

Orators :
1. Moulavee Qaari Ash-Shaikh M. Zainul Aabideen Baaqavee (Senior Member, Islamic Scholars (Jamaathul Ulamaa) Wing).
2. Moulavee Haafiz Qaari Ash-Shaikh M. Mahboob Basha Rashadi (Member, Guidance and Training Wing).
3. Moulavee Qari Ash-Shaikh H.M. Abdur Rahman Mazhahiri (Member, Scholars (Jama'athul Ulamaa) Wing).

Program 2:

Date : Insha Allah July 9, 2010 Friday @ 6:30pm (after Maghrib Prayer).
Venue: Kuwait City - Masjid Al Shaaya, Near Mirqab KPTC Bus Terminal & near to Liberation Tower / Souk Al Wataniya.

Orators :
1. Moulavee Haafiz Qaari Ash-Shaikh A.R. Mohamamed Ibraheem Manbayi (Senior Member, Scholars (Jama'athul Ulamaa) Wing).
2. Moulavee Haafiz Qaari Ash-Shaikh ( Sri Lanka ) M.T.M. Muhammed Ajwad Raivindhi Laahori (Senior Member, Scholars (Jama'athul Ulamaa) Wing).
3. Moulavee Haafiz Qaari Ash-Shaikh F. Sheakh Dawood Siraji (Senior Member, Scholars (Jama'athul Ulamaa) Wing).

A short spontaneous quiz program on the captioned conference title will be held and instant gift will be provided.

Both the program shall be presided by Acting President Moulavee M.S. Mohammed Meera Shah Baaqavee and anchored by Moulavee Afzalul Ulamaa Ash-Shaikh A.B. Khaleel Ahmed Baaqavee M.A., General Secretary.

Separate seating arranged for ladies and dinner will be served at the end of each program.

K-Tic cordially invites everyone to this seminar with their family members, relatives and friends. Also, please pass this information to all Tamil speaking community in Kuwait and take part in this useful seminar.

For further details please contact:
Hotline : (+965) 97 87 24 82
Emails : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
Official Website : www.k-tic.com
Yahoo Group : http: //groups.yahoo.com/group/K-Tic-group

Moulavee M.S. Mohammed Meera Shah Baaqavee, Acting President (99694208)
Moulavee A.B. Khaleel Ahmed Baaqavee, General Secretary (66641434)
Al-Haaj A.K.S. Abdul Nazar, Dy. Gen. Secretary (99430786)
Al-Haaj H. Mohammed Nasar, Joint Treasurer (97302747)
Janaab M. Zahir Hussain, Joint Secretary (97652767)

Tags: இஸ்ரா குவைத் மிஃராஜ் Isra’a k-tic Mi'raj

Share this