Breaking News

கடலூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் மதுவிலக்கு கோரி மஜக மனு!

நிர்வாகி
0

மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகீர் ஹுசைன் தலைமையில் மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் முன்னிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் பூரண மது விலக்கு அமுல்படுத்த கோரி மனு அளிக்கப்பட்டது.


தொடர்ந்து ஊடகங்களுக்கு மஜக சார்பில் மேற்கொண்டு வரும் மது எதிர்ப்பு பரப்புரை மற்றும் கோரிக்கை மனு குறித்து தெரிவிக்கப்பட்டது.


இதில், கடலூர் (வ) மாவட்ட துணை செயலாளர்கள் யூசுப், கடலூர் யாசீன், அஜ்மீர் கான், கடலூர் (தெ) கொள்ளுமேடு ரியாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் நைனா முஹம்மது, கடலூர் (வ) மாவட்ட IKP செயலாளர் அப்துல் பாசித், கடலூர் நகர செயலாளர் இல்யாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags: செய்திகள்

Share this