Breaking News

லால்பேட்டை சிங்கார வீதி ஹபீபுர் ரஹ்மான் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை சிங்கார வீதி தாருஸ் ஸலாம் நகரில் வசிக்கும் அசாப்பிள்ளை மர்ஹும் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் மகனும், அப்துல் ரஹ்மான்,அப்துல் ரவூஃப் ஆகியோரின் சகோதரரும், வாணக்கார் மர்ஹும் அப்துர் ரஹ்மான் அவர்களின் மருமகனும், நவ்வர் ஹுஸைன் மற்றும் முஹம்மது இஸ்மாயில் ஆகியோரது மாமனாருமான அசாப்பிள்ளை ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் இன்று காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார். இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு "ஸப்ரன் ஜமீலா" எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this