Breaking News

கடலூர் தெற்கு மாவட்ட இ.யூ. முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம் & லால்பேட்டை நகர பொதுக்குழு கூட்டம்.

நிர்வாகி
0
கடலூர் தெற்கு மாவட்ட இ.யூ. முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம் & லால்பேட்டை நகர பொதுக்குழு கூட்டம்
லால்பேட்டை புதுப்பள்ளிவாசல் மகளிர் மத்ரஸா மண்டபத்தில் 18/02/2020 செவ்வாய்க்கிழமை காலை 11.மணியளவில் எழுச்சியுடன் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்க்கு கடலூர் தெற்கு மாவட்ட இ.யூ. முஸ்லிம் லீக் துணைத் தலைவர் சிதம்பரம் எம்.ஏ.முஹம்மது ஜக்கரிய்யா தலைமை வகித்தார்.
கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளரும் பரங்கிப்பேட்டை நகர இ.யூ முஸ்லிம் லீக் செயலாளருமான மெளலானா ஷேக் ஆதம் மழாஹிரி கிராஅத் ஓதினார். கடலூர் தெற்கு மாவட்ட இ.யூ. முஸ்லிம் லீக் செயலாளர் ஏ.சுக்கூர் வரவேற்று பேசினார்.
மாவட்டப் பொருளாளர் மங்கலம்பேட்டை ஏ.சகாபுதீன் துவக்கவுரையாற்றினார். கடலூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆயங்குடி முஹம்மது இக்பால், தேசிய கவுன்சில் உறுப்பினர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி ,காயிதே மில்லத் பேரவை பிரமுகர் மானியம் ஆடூர் எஸ்.குத்புதீன்,சிதம்பரம் நகர இ.யூ. முஸ்லிம் லீக் செயலாளரும் கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை துணைத் தலைவருமான மெளலானா ஷாஹுல் ஹமிது பாகவி,கொள்ளுமேடு மெளலானா முஹம்மது ஹாரிஸ் மன்பஈ, மாவட்ட துணைச் செயலாளர் மங்கலம்பேட்டை நூருல்லாஹ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மாநில துணைத் தலைவர் தளபதி ஏ. ஷஃபீகுர் ரஹ்மான் கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் ராஜா ரஹிமுல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இக்கூட்டத்தில் லால்பேட்டை நகர இ.யூ . முஸ்லிம் லீக் தலைவராக எஸ்.எம்.அப்துல் வாஜிது,நகர செயலாளராக எம்.ஹெச்.முஹம்மது ஆசிப்,நகர பொருளாளராக ஏ.ஏ. முஹம்மது தைய்யூப் முஹிப்பி, துணைத் தலைவர்களாக ஹாஜி.எஸ்.எம்.ஹாமிது,ஹாஜி.கே.எஸ். சஃபியுல்லாஹ் மெளலவி எஸ்.எம்.ஜமால் அஹமது,எம்.டி. கலீமுல்லாஹ், ஏ.ஜி.பஜிலுர் ரஹ்மான் , துணைச் செயலாளர்களாக டி.ஏ. அபுசுஹூது,எம்.அமானுல்லா,எஸ்.ஏ. அபுசுஹுது, வி.ஒய்.முஹம்மது அன்சாரி,மௌலவி எம்.ஏ. ஜியாவுத்தீன்,
நகர இளைஞரணி தலைவராக மெளலவி எம்.ஹெச்.மஹபூப் அலி ரப்பானி, பொருளாளராக ஏ. நஜியுல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் கடலூர் மாவட்ட முன்னாள் தலைவரும்,மாவட்ட கவுரவ ஆலோசகருமான எஸ்.ஏ.அப்துல் கப்பார், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில்,தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சிதம்பரம் முஸ்தபா, செயலாளர் மங்கலம்பேட்டை சுஜாவுத்தீன்,பொருளாளர் லால்பேட்டை முபாரக்,
மங்கலம்பேட்டை நிர்வாகிகள் நூர் முஹம்மது,சர்தார், சவ்ரிராஜன்,அஷ்ரப், சேட்டு,ஆயங்குடி முஹம்மது அலி, மானியம் ஆடூர் சுலைமான்,ஜாக்கிர் ஹுஸைன் நகர் மெளலவி இர்பானுல்லாஹ்,
லால்பேட்டை எம். ஹெச்.முஹிபுல்லா,ஏ. ஹஜ்ஜி முஹம்மது, பாரூக்,எம்.எம்.உஜைர் அஹமது ,மெளலவி முஹம்மது, எஸ்.எம்.அனீசுர் ரஹ்மான்,உபைதுர் ரஹ்மான்,ஹாமிம், ஏ.எஸ்.அஹமது, ஹஸன்,சாதுல்லா,அஸ்கர்,ஆதிஃப்,ஆஷிக், முஸாஹிர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்க முன்னோடிகள் பங்கேற்றனர்.
முன்னதாக லால்பேட்டை புதுபஜாரில் மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியையும், இ.யூ. கடலூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் எம்.ஏ. முஹம்மது ஜக்கரிய்யா, எம்.எஸ்.எஃப் கொடியையும் ஏற்றி வைத்தனர்.
லால்பேட்டை நகர செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆசிஃப் நன்றி கூறினார். துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

Tags: லால்பேட்டை

Share this