Breaking News

பொது வாழ்வில் மணி விழா காணும் காயிதே மில்லத் கண்டெடுத்த தளபதி

நிர்வாகி
0

வேண்டுகோள்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சேவையில் பொன்விழா கண்டவரும், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களால் முஸ்லிம் லீகின் தளபதியாக அழைத்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டவருமான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில துணைத் தலைவர் லால்பேட்டை மௌலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் மன்பஈ அவர்களின் வாழ்க்கை வரலாறை தாங்கி வெளி வர இருக்கும் (பொது வாழ்வில் மணி விழா காணும் காயிதே மில்லத் கண்டெடுத்த தளபதி!) நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது.

அரசியல் ஆன்மீகம் கல்விப் பணி எழுத்து ப்பணி மற்றும்

பொது சேவை உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்நூலை, சேவை மனப்பான்மையுடன் மிகச் சிறப்பான பணிகளை முன்னெடுத்து வரும் தாருஸ் ஸலாம் பதிப்பகம் வெளியிட இருக்கிறது.

இந்த நூலிற்கு தளபதி அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள்,மறைந்த தலைவர்கள் முஜாஹிதேமில்லத் பனாத்வாலா ஸாஹிப், மஹபூபே மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட் ஸாஹிப், சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் ஸாஹிப், ஷம்ஷீரே மில்லத் அப்துல் லத்தீப் ஸாஹிப், ஈ.அகமது ஸாஹிப், சையது முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் உள்ளிட்ட முஸ்லிம் லீக் தலைவர்கள், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோரோடு உள்ள புகைப்படங்கள் இருந்தால் அனுப்பித் தந்து தளபதி அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் சிறப்புற வெளிவர துணை புரிய வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்பு / வாட்சப் எண்: 00971 50 9228580 00971 56 4015774 மெயில்: dslpublication@gmail.com

Tags: லால்பேட்டை

Share this