Breaking News

உலகை அலற வைத்த நோய்களின் கோர தாண்டவம்!

நிர்வாகி
0
 

கடந்த இரண்டு மாதங்களாக உலகையே பதற வைக்கும்  நோயாக கொரானா இருக்கின்றது. உலக நாடுகளுக்கிடையே ஏற்படக் கூடிய சண்டைகளில் பயோ-கெமிக்கல் ஆயுதம் மிகவும் ஆபத்தான மனித கொல்லி ஆயுதமாக கூறப் படுகிறது.  சதாம் ஹுசைன் ஈராக்கில் அதுபோன்ற ஆயுதம் வைத்திருப்பதாக பொய்யான கட்டுக் கதை விட்டு ஈராக்கினையே சீரழித்த பெருமை கூட்டுப் படையின் கதாநாயகன் அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஸ்ஸை ,சேருமென்றால் அது மிகையாகாது. அதுபோன்ற ஆயுதத்தினை சீனா ரகசியமாக ஊஹான் நகரில் ஹுவாய் மாநிலத்தில் தயாரிப்பதாக ‘டீன் கூண்ட்ஸ்’ என்ற அமெரிக்கா எழுத்தாளர், 1981 ம் ஆண்டு வெளிவந்த, 'தி ஐஎஸ் ஆப் டார்க்னெஸ்'(the eyes of darkness) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அதில் '2020 ம் ஆண்டு உலகினை நிமோனியா என்ற நுரையீரலை பாதித்து மூசசு விட முடியாத அளவிற்கு கொடிய நோய் ஆட்டிப் படைக்கும்' என்றும் கூறியுள்ளார். அதனை வெளி உலகிற்கு சொன்ன சீன ஆராய்ச்சியாளர் முனைவர் ‘லீ வேனிலியாங்’ வீட்டு சிறையில் வைக்கப் பட்டு உயிர் இழந்தது செய்தியாக வந்துள்ளது பலருக்கு தெரிந்திருக்கும்.

இதனை உறுதிப் படுத்தும் விதமாக மிகவும் நவீன தொழில் நகரமான ஊஹானில்  மட்டும் இந்த நோய் பரவியதும், மற்ற நகரங்களான பீஜிங், சங்கை போன்ற மாநிலங்களை பாதிக்கவில்லை என்றும் சீனாவின் நட்பு நாடுகளான ரஸ்யா, வட கொரியா நாடுகளையும் பாதிக்கவில்லை என்றும்  பார்க்கும் போது அதுபோன்ற ஒரு முயற்சி இருந்திருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறதல்லவா? எப்போது அமெரிக்க அதிபர் சீனாவின் ஏற்றுமதி பொருள்களுக்கு அதிகமான வரிகள் விதித்தாரோ, எப்போது மற்ற நாடுகள் சீனாவில் தொழில் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தாரோ, எப்போது ஜப்பானுக்கு ஆதரவாக தெற்கு சீனா கடல் பகுதியில் அமெரிக்கா கடற்படை ரோந்து அனுப்பியதோ  அப்போதே அமெரிக்க-சீன மறைமுக யுத்தம்(cold war) ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம். இதில் அதிசயம் என்னவென்றால் கொரானாவால் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள் அமெரிக்காவின் கூட்டு நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி  போன்றவைகளாகும். இந்தக் கூற்றை  நிரூபிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் கொரானா நோயினை 'சீன வைரஸ்' என்று குற்றம் சுமத்துவதும், பதிலுக்கு சீனா அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் மூலம் தான் இந்த நோய் சீனாவிற்குள் நுழைந்து விட்டது என்று கூறுவதும் அனைவரும் பத்திரிக்கை வாயிலாக தெரிந்திருப்பீர்கள். ஆனால் யாரோ கொளுத்தி போட்ட நோய் இன்று உலகில் பலநாடுகளிலும் தீயாக கொழுந்து விட்டு எரிகின்றது என்றால் மிகையாகாது.

அது சரி, இதற்கு முன்பு இதுபோன்ற நோய்கள் உலகை தாக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆம், சில நோய்கள் தாக்கியுள்ளன. அவைகள் பின் வருமாறு:

 • முன்பு இளம் பிள்ளை வாதம் உலகில் ஏற்பட்டு சிறு குழந்தைகள் கை, கால்கள் முடக்கப் பட்டு அவதிப் படுவதினை கண்டு இருப்பீர்கள். அதனை போலியோ நோய் என்று கூறுவார்கள். அதற்கு மருந்து கண்டு பிடிக்க green monkeys என்று அழைக்கப் படும் ஆப்பிரிக்க குரங்குகளை பிடித்து அதற்கான மருந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். அந்த வகை குரங்குகளினாலும், பழந்திண்ணி வவ்வாலாலும், அவைகளின் எச்சிகளாலும், கழிவுகளாலும், மனித உடலில் படும்போது மனிதர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, வாந்தி, வயிற்று வலி, நெஞ்சடைப்பு ஏற்பட்டு பலர் மரணம் அடைந்துள்ளனர். அந்த வகை நோய்கள் 'marburg', 'ebola' என்றும் அழைக்கப் பட்டது. மார்புர்க் நோயால் மரணம் அடைந்தவர்கள் 31,000/ ஆகும், ebola வினால் மரணம் அடைந்தவர்கள் 11,380/ என்றும் கூறப் படுகிறது.
 • Hanta virus என்று அழைக்கப் படும் நோய் எலிகளின் கழிவுகள், எச்சில், சிறுநீர் ஆகியவற்றால் ப்ளூ போன்ற கடும் காய்ச்சல், சளி தொல்லை ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கப் பட்டு பலர் இறந்துள்ளனர். அமெரிக்கா கொரியா யுத்தத்தில் போரிட்ட அமெரிக்கா படையினர் 3000 பேர்கள் இறந்துள்ளனர். அதன் பிறகுதான் ரிபாவியன் என்ற மருந்து ஆராய்ச்சியில் கண்டு பிடித்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
 • Bird flu என்று அழைக்கப் படும் பறவைகளாலும், கோழி, சேவல் போன்றவற்றினாலும் ஏற்படுகின்ற நோயாகும். இந்த நோயும் கினி காய்ச்சல் என்றும் சொல்லுவார்கள்.
 • அர்ஜென்டினா நாட்டில் Junin வைரஸ் பரவி பலர் தீவிர காய்ச்சல், தோல் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவினால் இருந்துள்ளார்கள்.
 • Larsa வைரஸ் எலிகளால் ஏற்படும் நோயாகும். இந்த நோயால் ஆப்பிரிக்க கண்டத்தில் பலர் இறந்துள்ளனர்.
 • Crimea-Congo வைரஸ் எட்டுக் கால் உன்னியால் நாய்களை கடித்து ரத்தம் உறிஞ்சும் நோயாகும். அவை மனிதர்களை பாதிக்கும் போது முகம், வாய் போன்றவற்றில் புண் வந்து குரல் வலையினை நெரிக்கும் அளவான நோயாகும்.
 • Machupo வைரஸ் பொலிவியா நாட்டில் ஏற்பட்டு பலருக்கு கடுமையான காய்ச்சல், ரத்தப் போக்கு உண்டாகி மரணம் ஏற்படுத்தும். அவை மனிதனுக்கு மனிதன் பரவக்கூடியது.
 • Kyasanur Forest வைரஸ்(KFD) என்ற நோய் 1955 ம் ஆண்டுகளில் தென் இந்திய கடற்கரை பகுதிகளில் எலி, பறவை, பன்றி போன்றவைகளால் கடும் காய்ச்சல், பொறுக்க முடியாத தலைவலி, உடல் வலி ஏற்பட்டு ரத்தப் போக்கும் ஏற்படும்.
 • Dengu வைரஸ் காட்டுப் பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்களில் கொசுக்கடியால் ஏற்பட்டு கிட்டத்தட்ட பத்துக் கோடி மக்கள் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் பாதிக்கப் பட்டனர்.
 • Zika வைரஸும் மலேரியா, டெங்கு, போன்ற கொசுக்கடியால் ஏற்படும் நோய் தான்.
 • SARS (Severe Acute Respiratory Syndrome): தாங்க முடியா மூச்சுத்தினரால் ஏற்படுகின்ற கொரானாவினை
ஒத்த நோயாகும். அது ஆசியாவில் 2003 ல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பரவியது. அப்படி பரவியும் அதற்கான மருந்து கண்டு பிடிக்கவில்லை. இந்த நோயால் பாதிக்கப் பட்டோர் 8098 பேர்கள் ஆகும் அதில் 774 பேர்கள் உயிரிழந்துள்ளாரகள்.

இப்போது உலகளவில் பயமுறுத்துக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் சீனாவின் ஊஹான் நகரத்தில் ஆரம்பித்து உலகின் பல இடங்களுக்குப் பரவி 8,53,367 பேர்களை பாதித்திருக்கின்றது. அதில் இன்று வரை 42,000 இறந்திருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைக்குப் பின்பு 1,58,783 பேர்கள் குணமடைந்துள்ளதாகவும் கூறப் படுகிறது. இதில் அதிகம் பாதிக்கப் பட்ட நாடுகளில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்றவையாகும். அது சரி, இதுபோன்ற ஒரு நோய் பற்றி யாருக்கும் தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம். ஏன், நமது பள்ளி 12 வது மாணவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள பயோலாஜி புத்தகத்தின் பக்கம் 166 ல் கூட கொரானா நோய் எப்படி இருக்கும், அதனால் எப்படி பாதிப்பு ஏற்படும் அந்த நோயின் தாக்கம் மூன்று வாரங்கள் இருக்கும் என்று விரிவாக கூறப் பட்டுள்ளது. ஏன் நாம் உபயோகிக்கும் கை கழுவும் டெட்டால் சானிட்டிசாரில் கூட குறிக்கப் பட்டுள்ளது சிலர் பார்க்காமல் இருந்திருக்கலாம். 1914 ம் ஆண்டு கைமுறை பாக்கெட் வைத்தியம் என்ற புத்தகத்தில்  துளசிங்க முதலியார் கொரானா மாத்திரை என்று மிளகு, லவங்கம், ஜாதிக்காய், ஓமம், திப்பிலி, கருஞ்சீரகம், கோரோசனை,மாந்தளிர், வேப்பன்கொழுந்து ஆகியவற்றை இடித்துப் பொடியாக்கி சாப்பிட்டால் கொரானா குணமாகும் என்று அச்சடித்த புத்தகம் வெளியிட்டுள்ளார் என்று பார்க்கும் போது கொரானா நோய் நமக்கு தெரியாதல்ல என்று கூறவேண்டியுள்ளது.

சீனாவின் ஊஹான் நகரில் மீன் மார்க்கெட்டில் இறால் மீன் வியாபாரம் செய்யும் வீ ஹூசைன் என்ற 53 பெண்ணுக்கு 2019 டிசம்பர் மாதத்தில் கொரானா நோய் வந்துள்ளது. அவர் கூறும்போது, தான் மார்க்கெட்டில் உள்ள கழிப்பிடத்தில் தான் உபயோகிப்பதாகவும், அதனால் நோய் வந்து விட்டது என்கிறார். பின்பு மருத்துவர்களிடம் காட்டி சுகம் அடைந்ததாக கூறுகிறார். அப்போதே உஷாராகி இருந்தால் சீனாவில் பரவியிருக்காது என்று சொல்லுகிறார். சிலர் சீனாவில் பெங்கோலின் என்ற எறும்பு திண்ணி மிருகம் மற்றும் பழந்திண்ணி வவ்வால்  மாமிசத்தினை சாப்பிட்டதால்  பரவியது என்று கதை விடுகிறார்கள்.  ஆனால் அறிவுப் பூர்வமாக பார்ப்போமேயானால் கொரானா நோய் கறி, மீன் சாப்பிடுவதால் ஏற்படுவதில்லை,  ஏனென்றால் இந்த நோய் SARS   சார்ஸ், H 1N 1, HIV போன்ற இனத்தினைச் சார்ந்ததாகும். ஊஹான் நகரம் மிகவும் நவ நாகரீகமான நகரமாகும். அங்கு மிகவும் நவீனமான மருத்துவ ஆராய்ச்சி  நிலையங்கள் உள்ளன. அது போன்ற நோய்களை நிச்சயமாக குணமாக்கி இருப்பார்கள். ஆனால் ஊஹான் நகரிலேயே பரவி பல உயிர்களை காவு கொண்டு மற்ற நாடுகளுக்கும் பரவியிருக்கின்றது என்றால், ஆராய்ச்சி செய்து அந்த நோயால் இறந்த ‘லீ’ என்ற டாக்டர் போன்றவர்கள் செயற்கையாக கொரானா கூறுகளை ஆராய்ந்து அதனை வருங்கால உயிர்கொல்லி யுத்தத்திற்கு பயன்பட வைத்திருக்கும் வைரஸ்கள் தவறாக பயன்படுத்தி அதன் தாக்கத்தினை காட்டிவிட்டது என்றே சொல்லலாம்.

எந்த ஆராய்ச்சியாளரும் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பர். அதுபோன்று தான் ஊஹான் நகரில் தொடங்கிய நோய் மற்ற சீன நகரங்களுக்குப் பரவாமல் தடுக்கப் பட்டு விட்டது. அரசு விதித்த கட்டுப் பாடுகளும் தளர்த்தப் பட்டன. ஆனால் அப்படி துரித நடவடிக்கை எடுக்காத அமெரிக்காவும், இத்தாலியும் மிகவும் பாதித்துள்ளனர். அமெரிக்கா சென்றவர்களுக்கு தெரியும் அங்கு சீன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அதேபோன்று இத்தாலியில், சீன மக்கள் 3,15,000/ மக்கள் வசிப்பதாக சொல்லப் படுகிறது. அங்குள்ள தொழிற்சாலைகளில் சீனர் பெரும்பாலும் வேலை செய்கின்றனர்.  அவர்கள் சீன புத்தாண்டுக்கு ஊஹான் நகருக்கு சென்று வந்ததாக கூறப் படுகிறது. அவர்களை விமான நிலையத்திலேயே தணிக்கை செய்யவில்லை என்றும் கூறப் படுகிறது. அதேபோன்று அமெரிக்காவில் கொரானா பரிசோதனை நிலையம், அட்லாண்டா மாநிலத்தில் தான் இயங்குவதாகவும், ஆகவே பல நகரங்களிலிருந்து வருகின்ற சோதனைகள் தாமதம் ஏற்பட்டதால் பலர் பாதிக்கப் பட்டதாகவும், தற்போது தான் பல நகரங்களில் பரிசோதனை நிலையங்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப் படுகிறது.

அதனை உறுதி செய்யும் விதமாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக இயக்குனர், கபோர் கலேன், என்பவர் கூறும்போது அமெரிக்க அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை, தேவையற்ற கட்டுப் பாட்டால் வாஷிங்டன், கலிபோர்னியா மாநிலங்களில் பின்பு 21 மாநிலங்களில் காலந்தாழ்த்தி நடவடிக்கை எடுத்துள்ளது என்று குறை கூறியுள்ளார்.

கொரானா நோய் எப்படி இருக்கும்: இந்த வைரஸ் சுவாசக் கால்வாயை தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைகிறது. மருந்தின் மூலம் சிகிச்சை செய்யப் பட்டு அடைப்புகள் நீக்கப்பட்டு சுவாசப்  பாதை திறக்கப் பட வேண்டும். அப்படி திறப்பதற்கு பல நாட்களாகும். அப்படி ஏற்படும் அடைப்புகள் வராமல் தடுப்பது எப்படி என்று சீன மருத்துவர்கள் கூறும் அறிவுரையானது என்னெவென்றால்,

 • சூடான தண்ணீர், டீ, காபி சூப்பு போன்றவைகளை 20 நிமிடத்திற்கு ஒரு தடவை எடுக்க வேண்டும், 2) சூடான தண்ணீரில், உப்பு, எலுமிச்சை சாறு, வினிகர் கலந்து அடித்தொண்டை ஈரம் படும்படி கொப்பளிக்க வேண்டும், 3) உடையில் கூட ஒட்டும் தன்மை கொண்டது. ஆகவே வெளியில் சென்று வந்ததும் உடுத்திய துணியினை சோப்புப் போட்டு தப்பி விட வேண்டும், 4) இந்த நோய் உலோக மேற்பரப்பில் 9 நாட்கள் வரை இருக்கும். ஆகவே அவைகளை சோப்புப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். 5) கூடியமானவரை காய் கறி உணவுகள், மற்றும் வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு போன்ற பழவகைகளை உண்ணுங்கள் போன்றவையாகும்.
கொரானா நோய்க்கு மலேரியா நோயினை குணமாக்கக் கூடிய Hydro Chloroquine மற்றும் Azithromycin போன்ற மாத்திரைகள் கொண்டு குணமாக்கலாம் என்று கூறப் படுகிறது. ஆனால் அது நூறு சதவீதம் வெற்றி என்று கூறமுடியாது.

கொரானா நோயால் இறந்தவர்கள் 42000 என்றும் அதில் பாதிக்கப் பட்ட ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெராசாவாவும் ஒருவராவார். பாதிக்கப் பட்ட முக்கிய பிரமுகர்கள் பட்டியலில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும், அவருடைய சுகாதார மந்திரியாகும். ஜேர்மன் நிதி  மந்திரி இந்த நோயால் தனது நாட்டு வருமானம் போய் விடுமோ என்று பயந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப் படுகிறது. உலக வங்கி அறிக்கையில் கொரானா நோயால் உலகில் 1கோடியே பத்து லட்சம் பேர் வறுமையால் வாடுவார்கள் என்று சொல்கிறது.

இந்தியாவில் நோயை கட்டுப் படுத்த மூன்று வாரங்கள் ஊரடங்கு சட்டம் 25ந்தேதி நடு இரவு முதல் திடீர் என்று அறிவிக்கப் பட்டவுடன், ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பெருமளவிற்கு பாதிக்கப் பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்திலிருந்து இரண்டு சாதமாக வீழ்ச்சி அடையுமென்று உலக பொருளாதார அமைப்புக் கூறுகிறது(IMF). ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலத்திற்கு பல நூறு மைல்கள் நடந்தே பெண்கள், பச்சிளம் குழந்தைகள், மூட்டை, முடிச்சுகள் தலையில் சுமந்தபடி சென்ற காட்சி கண்ணீரை வரவழைக்கவில்லையா உங்களுக்கு.

அப்படி சென்ற மக்களை எல்லையில் தடுத்து நிறுத்தியும், அவர்கள் மீது கிருமி நாசினியை அடித்து குழுப்பாட்டி கண்ணெரிச்சல் உண்டாக்கியது மனித உரிமை ஆணையத்தின் கண்டனத்திற்கு ஆளாகி இருப்பதேன் என்று கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை. பாண்டிச்சேரி மாநிலம் முதலிப் பட்டுக் கிராமத்தில் தங்கள் எல்லையில் அடுத்த கிராமத்தினர் வரக்கூடாது என்று தடைகள் ஏற்படுத்திய காட்சி பத்திரிக்கை படம் போட்டுக் காட்டின. ஏன் ஈரோட்டிலிருந்து தனது சகோதரி மற்றும் மைத்துனருடன் கோவைக்கு தனது வீட்டிற்கு விடுமுறையில்  சென்ற பெண் நீதிபதியினை அந்த  குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் ஈரோட்டிற்கே திரும்பிவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆகவே இந்தியாவில் இன்னொரு உத்தமபுரம் வந்து விடுமோ என்றும் அஞ்ச வேண்டியுள்ளது.

தெரிவித்ததால் ஈரோட்டிற்கே திரும்பி வந்து விட்டதாக செய்தி வந்துள்ளதே, அது போன்ற  சங்கடங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு சில நாள் கால அவகாசம் கொடுத்திருந்தால் தடுத்திருந்திருக்கலாமே என்று உங்களுக்கு என்னத் தோன்றவில்லையா? இந்த அறிவிப்பால் சில நல்ல செய்திகளும் வந்துள்ளன. அவைகள்:

1) அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் நீதிபதிகள் தங்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதினால் வீட்டு வேலைகளை செய்வதற்கு மனைவி மார்களுக்கு உதவி செய்கிறார்கள். சென்னை உயர்நீதியரசர் அவர்கள், 'நான் முதல் தடவையாக விடுமுறையில் வீட்டில் இருந்ததால் மனைவிக்கு அடுப்படியில் காய், கறி நறுக்கி உதவி செய்தேன் என்று கூறுகிறார்.

2) கொரானா நோயில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முகக் கவசம் முக்கியமானதாக கருதப் படுகிறது. அது கிடைப்பதில் சிரமமும் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த சென்னை அனீஸ் புர்கா முதலாளி கபீர் அவர்கள் தன்னிடம் உள்ள புர்கா துணிகளைக் கொண்டு தான், அவருடைய மகன், பேரன் ஆகியோருடன் மிகக் கவசம் தைத்து கேட்கும் மருந்துக் கடைகளுக்கு குறைந்த விளையான ரூ 15/ க்கு தைத்துக் கொடுத்ததாக சொன்னார். ஆகவே முழு அடைப்பு என்று வீட்டில் வெறுமனே இருந்து விடவில்லை என்பது பாராட்டக்கூடியது தானே !

3) 3) உணவிற்கு மீன், கறி ஆகியவைகளின் விலை அதிகமானதால் காய்கறிகள் சமைக்கும் கட்டாயம் வந்து விட்டது. ஆகவே கிராமத்திற்கு திரும்பியவர்கள் வயல்களில் பெற்றோர், உறவினருடன் சேர்ந்து வேலை செய்யும் காட்சியினைக் காண முடிகிறது.

4) சிறுவர் முதல் பெரியவர் வரை வீட்டில் இருப்பதால் அலுவல் காரணமாக இதுவரை சென்றவர்கள் தங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசி, மகிழ முடிகிறது.

5) வெளி நாட்டில் உள்ளவர்களுக்கு வரிசையில் நின்று தங்கள் அலுவல் முடிக்க வேண்டும் என்ற பழக்கம் உள்ளது. ஆனால் நமக்கு அந்த பழக்கமில்லை. திருமண பந்திக்குக் கூட அடித்துப் பிடித்து இடம் பிடிக்கும் பழக்கம் உள்ளது. 2016 நவம்பர் மாதம் 8ந் தேதி ரூ. 1000/ ரூ. 500/ செல்லாது என்று அறிவித்தபோது, கையிலிருக்கும் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முண்டியடித்து வங்கியில் நுழைந்தபோது கிட்டத்தட்ட 100 பேர்கள் இறந்ததாக கூறப் படுகிறது.  ஆனால் தற்போதுள்ள கட்டுப் பாட்டில் டீக்கடையில் கூட டிக் குடிக்க இடைவெளி விட்டு சுண்ணாம்பால் அல்லது பெயிண்டால் போட்ட வட்டத்திற்கும் நின்று டீ வாங்கி குடிக்கும் பழக்கத்தினை இந்த ஜனதா ஊரடங்கு ஏற்படுத்தியுள்ளது என்றால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கொரானா ஏற்படுத்திய தாக்கத்தில் சில புதிய கண்டுபிடிப்புகள் நடந்துள்ளன, அவை:

1) நோயாளிகளுக்கு  தீவிர சிகிச்சை தேவைப் படும்போது வெண்டிலேட்டர் அவசியம். தரமான வெண்டிலேட்டர் விலை ரூ. 4000000/ என்று கூறப் படுகிறது. அவற்றினையே IIT ஐராபாத் மாணவர்கள் இந்தியாவில் ரூ 6 லட்சம் விலைக்கு கிடைக்கக்கூடிய, 'Bag Valve' வெண்டிலேட்டர் தயாரித்துள்ளார்களாம்.

2) நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அங்கே கிருமிகள் பரவும். அதனைப் போக்க புது விதமான Scitech ஐரோம் Purifier கண்டு பிடித்துள்ளார்களாம். அதனை வைத்தே சீனாவில் கொரானா நோய் மருத்துவமனை மூலம் பரவாமல் தடுத்து விட்டார்களாம்.

கொரானா நோயைக் கட்டுப் படுத்த மக்கள் நிதியினை வாரி வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடப் பட்டு பல பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள் நன்கொடை கொடுக்க வந்தது பாராட்டத் தக்கது. அதே நேரத்தில் அரசால் வசூலிக்கமுடியாத கடன் என்று ரூ. 1,14, 000/ கோடிகள் முதலாளிகளிடமிருந்து தள்ளுபடி செய்யப் பட்டு பல வங்கிகள் சமீபத்தில் திவாலானது. அப்படிப் பட்டவர் சொத்துக்களை அவசர சட்டம் மூலம்  கைப்பற்றினால் பல லட்சம் கோடிகள் கிடைக்குமல்லவா? அதனை ஏன் அரசு செய்யவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை தானே!

கொரானா நோய் இந்தியர்களுக்கு புதிதல்ல மாறாக அறிந்த ஒன்று தான் அதனை கட்டுப் பாட்டுடன் எதிர் கொள்ளுவதோடு அரசுடனும் பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றால் சரிதானே! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்.டி., ஐ.பீ.எஸ்(ஓ )

Tags: கட்டுரை

Share this