வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக சமுதாயக் குரல்!
உலகை நிலைகுலையச் செய்த கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிப்போரும்,அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள விலகி நிற்போரும் ஒருபுறம் என்றால், எதுவுமே சொல்ல முடியாமல் ஒரு பெருங்கூட்டம் அயலகங்களில் சிக்கி தாயகம் திரும்பத் தவிக்கிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொரோனா இடர்பாடுகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.கே.குஞ்சாலி குட்டி ஸாஹிப்,ஈ.டி.முஹம்மது பஷீர் ஸாஹிப்,பி.வி.அப்துல் வஹாப் ஸாஹிப்,கே.நவாஸ் கனி ஸாஹிப் ஆகியோர் இந்தியப் பிரதமர் மாண்புமிகு.நரேந்திர மோடி அவர்களுக்கும்,வளைகுடா நாடுகளின் இந்தியத் தூதர்களுக்கும் விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்கள் இரண்டு தினங்களுக்கு முன் தொடர்பு கொண்டு அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்ப வேண்டும் என கோரிக்கை வைப்போர் அங்கு (அமீரகத்தில்)எந்த மாதிரியான பிரச்சினைகள் எதிர் கொள்கிறார்கள்? எனபதை கேட்டு தெரிந்து கொண்டார்கள்.
அமீரகத்தில் ஏற்கனவே வேலை வாய்ப்பு இழந்தவர்கள்,சுற்றுலா மற்றும் தற்காலிக விசாக்களில் வந்தவர்கள் அவர்களது விசாக்காலம் முடியும் வரை தேவையான பொருளாதாரத்தோடு வந்து, தற்பொழுது அந்த பொருளாதாரமும் காலியாகி,உணவு உறவிடங்களுக்கு பணமின்றி தவித்து வருக்கின்றனர்.
கற்பிணி பெண்கள், பிரசவத்திற்கு தாயகம் செல்ல திட்டமிட்டிருந்தவர்கள், இன்னொரு வகை இங்கு பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் செலவுகளுக்கு பயந்து தாயகத்தில் பிரசவம் பார்க்க முடிவு செய்திருந்தவர்கள் என பலரும் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றனர் என்பதை மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் அவர்களிடமும் தெரிவித்து,இதற்கு ஒரே வழி கேரளாவைப் போன்று தமிழக முதல்வரும் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தினோம்.
இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தலைவர் அவர்கள் இது குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்தார்கள்.
அதன் அடிப்படையில் மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒத்த கருத்தோடு இந்த தீர்மானம் நிறைவேற்றியமைக்கும் இன்று மீண்டும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என அறிவித்தமைக்கும் அமீரக காயிதே மில்லத் பேரவை,அய்மான் சங்கம் மற்றும் அமீரகத் தமிழர்கள் சார்பில் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இக்கோரிக்கையை துவக்கத்திலேயே தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்று, தொடர்ந்து தகவல்களை பரிமாறி வரும் தாய்ச் சபையின் மாநிலப் பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் MLA அவர்களுக்கும் அமீரகத் தமிழர்கள் சார்பில் இதயமார்ந்த நன்றி.
ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி.Tags: செய்திகள்