Breaking News

அற்புதம் அய்மானுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதம்..!

நிர்வாகி
0

அய்மான் சங்கம் தனது இரண்டாவது தனி விமான சேவையை இன்றைய தினம் 27/07/2020 அபுதாபியிலிருந்து தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மாநகருக்கு இயக்கியது.

அபுதாபி வரலாற்றில் முதல் முறையாக குறுகியகால அறிவிப்பில் தனி விமான சேவையை அமீரகத் தலைநகர் அபுதாபியில் இருந்து தமிழகத்திற்கு இயக்கி அய்மான் சங்கம் சரித்திர சாதனை படைத்துள்ளது.

அய்மான் சங்கத்தின் மீது அமீரக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால்,தொடர்ந்து நீங்கள் அடுத்து விமானத்தை இயக்கவேண்டும்,நாங்களும் அந்த விமானத்தில் தான் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இரண்டாவது விமான சேவை அறிவிப்பை வெளியிட்டோம்.

கடுமையான உழைப்பிற்கு பின் இறைவன் அருளால் நேற்றைய தினம் 26/07/2020 மாலை 5 மணியளவில் போதுமான பயணிகள் ஊர்ஜிதப்படுத்தப் பட்டார்கள்.

உடனடியாக சில மணி நேரங்களில் அவர்களுக்கான விமான பயணச்சீட்டு அச்சடிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த அரும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாதனை படைத்த அய்மான் சங்க நிர்வாகிகள் உழைப்பில் முதிர்ச்சிப் பெற்று, எந்த காரியங்கள் எப்போது வந்தாலும் அதை சாதிக்க துணிந்து நிற்பவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

இதன் பின்னணியில் இருக்கக்கூடிய உழைப்பு மிக சாதாரணமானதல்ல.அல்லாஹ்வுடைய பேருதவி இருந்த காரணத்தினால் சில அற்புதங்களும் நிகழ்ந்தது.

அமீரகத்தின் மற்ற நகரங்களிலிருந்து தனி விமான சேவை என்று அறிவித்தாலும் அவர்களுடைய அறிவிப்பில் ஆயிரக்கணக்கான நூற்றுக்கணக்கான பயணிகள் படையெடுத்து வரக் கூடிய சூழல் இருந்தது,ஆனால் அபுதாபியை பொருத்தவரை சூழல் அவ்வாறல்ல.

இருப்பினும் அய்மான் சங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையின் காரணத்தால் மிக கூடுதலான பயணிகள் குறைவின்றி பதிவு செய்து இந்த திட்டங்கள் நிறைவேற பயணிகளின் உற்சாகம் நமக்கு ஊக்கம் அளித்தது.

இந்த சேவை சிறப்பாக அமைய எங்களை வழி நடத்தி, தேவையான ஆலோசனைகள் வழங்கி வரும் அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை.ஷாஹுல் ஹமீத் அண்ணன், அனுதினமும் நமது ஏற்பாடுகளை கேட்டறிந்து, உற்சாகமூட்டி வரும் எந்நாளும் எங்களின் பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது அண்ணன்,ஓய்வின்றி உழைத்து உரமூட்டிய அய்மான் பொதுச் செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானி,துணைத் தலைவர் கீழக்கரை ஜமால்,பொருளாளர் லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, துணைப் பொருளாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர்,மக்கள் தொடர்பு செயலாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்ஷா,அய்மான் பைத்துல் மால் செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன்,மார்க்கத் துறை செயலாளர் மெளலவி ஹுஸைன் மக்கி ஆலிம்,செயற்குழு உறுப்பினர்கள் அதிரை.மாலிக், தேவிப்பட்டிணம் ஹாஜா முபீனுத்தீன், தாயகத்தில் இருந்தாலும் முழு நினைவையும் அபுதாயில் வைத்து தன் பங்கிற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த துணைப் பொதுச் செயலாளர் பூந்தை ஹாஜா உள்ளிட்ட மக்கள் சேவகர்களுக்கு இறைவன் தனது புறத்தில் இருந்து நிறைந்த நற்கூலியை வழங்குவானாக.

நமது அனைத்துப் பணிகளுக்கும் உடனிருக்கும் தமிழ் மக்கள் மன்றத் தலைவர் திரு.சிவக்குமார்,அமீரக காயிதேமில்லத் பேரவை விமான சேவை முடிவு பெற்று விட்டதே என ஓய்வெடுக்காமல் ஒவ்வொரு நாளும் நம்மிடம் விபரங்கள் கேட்டறிந்து,பயணிகளுக்கு வழிகாட்டிய துணைப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.ஏ.பரக்கத் அலி, சொக்கம்பட்டி கபீர்,மக்கி பைசல்,ஜிஃப்ரி உள்ளிட்ட QMF நிர்வாகிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இரு விமானங்கள் புறப்பட்ட தினங்களில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பும், இண்டிகோ ஊழியர்களின் கனிவான அணுசரிப்பும் அய்மான் நிர்வாகிகளுக்கு மன நிறைவை அளித்தது. அய்மான் பிரதிநிதிகளுக்கு பிரத்யேகமாக அனுமதி வழங்கி சிறப்பித்த விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்க கடமை பட்டுள்ளோம்.

கடந்த ஒரு மாத காலமாக அறிவிக்கப்படாத அய்மான் அலுவலகமாகச் செயல்பட்ட ராயல் சில்க்ஸ் நிறுவனத்திற்கும்,அதன் உரிமையாளர்களான சகோதரர்கள் மொய்தீன்,அஜ்மீர் ஆகியோருக்கு அய்மானின் அன்பு நன்றிகள்.

திருச்சி விமான நிலையத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் விமானத் துறை ஆய்வாளர் சகோதரர் உபைதுல்லாஹ்,திருச்சியில் தனிமைப்படுத்தும் பணிகளை ஒருமுகப்படுத்தி ஒருங்கிணைத்து வரும் IUML மாவட்டச் செயலாலர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான்,முஸ்லிம் மாணவர் பேரவை மாநிலப் பொதுச் செயலாளர் அன்சர் அலி, ஹுமாயூன் உள்ளிட்ட முஸ்லிம் லீக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.

விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தும் முகாமிற்கு பயணிகளை அழைத்துச் செல்ல அய்மான் மகளிர் கல்லூரி வாகனங்களை வழங்கி உதவி புரிந்த தலைவர் ஷம்சுத்தீன் ஹாஜி, கல்லூரி செயலாளர் ஹபீபுல்லாஹ் காகா ஆகியோருக்கும் இதயப் பூர்வமான நன்றி.

நமது சேவைகளை கேட்டறிந்து, உளப் பூர்வமாக பாராட்டி துஆ செய்த முன்னாள் தலைவர் கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹுஸைன் சித்தீகி,முன்னாள் பொதுச் செயலாளர் கீழக்கரை சையது ஜாபர் காகா,அய்மான் சங்க நிகழ்வுகளை உலகறியச் செய்யும் வகையில் ஊடகப் பணி செய்து வரும் பத்திரிக்கையாளர் முதுவை.ஹிதாயத்,uaetamilweb.com, லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் நிர்வாகிகள் ஆகியோருக்கும் நமது ஆழிய நன்றி. ஸ்ரீ ராம பிரசன்னா Srirama Prasanna

இவர் அய்மான் முதல் தனி விமானத்தில் பயணம் மேற்கொண்டு, நமது சங்கத்தின் அங்கமாக இருந்து மற்ற பயணிகளுக்கு சேவை செய்தார். தனிமை படுத்தல் முடிந்த பின்னர் சென்னை சென்று நமது இரண்டாவது தனி விமானப் பயணிகள் குழுமத்தில் தேவையான ஆலோசனைகள்,விளக்கங்கள் என பயணிகளின் பன்னூற்றுக் கணக்கான கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்து நமது நிர்வாகிகளின் பணிச் சுமையை குறைத்தவர். சகோதரர் ராம பிரச்சன்னா அவர்களுக்கு நமது சிறப்பு நன்றி.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் வெளிநாடு வாழ் தமிழர்களை மீட்டெடுக்கும் நாயகர்களாகத் திகழும் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் ஜனாப்.கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் சாஹிப் MLA, முஸ்லிம் லீக் நாடாளுமன்ற கொறடா ஜனாப்.கே.நவாஸ் கனி சாஹிப் MP ஆகியோருக்கும் அய்மானின் ஆழிய நன்றி.! ஜஸாக்குமுல்லாஹ்_ஹைரா! -ஏ.எஸ.அப்துல் ரஹ்மான் ரப்பானி பொதுச் செயலாளர்,அய்மான் சங்கம். 27.07.2020




Tags: உலக செய்திகள்

Share this