Breaking News

அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் களமருதூர் ஹாஜி ஷம்சுத்தீன் மறைவு!

நிர்வாகி
0

திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவரும்,அதன் ஸ்தாபகர்களில் ஒருவரும்,அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவரும், அமீரக காயிதே மில்லத் பேரவையின் மூத்த துணைத் தலைவருமான களமருத்துர் அல்ஹாஜ் ஜெ.ஷம்சுத்தீன் அவர்கள் இன்று 29-09-2020 திருச்சியில் தாருல்பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this