Breaking News

குறுங்குடி வெடி விபத்து தி மு க தலைவர் ஸ்டாலின் இரங்கல்..!

நிர்வாகி
0

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் குறுங்குடி கிராமத்தின் அருகே உள்ள இடைநாறூர் என்ற பகுதியில் பட்டாசு தயாரிப்பதைக் குடிசைத் தொழிலாகச் செய்து வந்துள்ளனர். இதில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 9 பேர் பலியான செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

சம்பவ இடத்திலேயே 5 பேர் மரணம் அடைந்தார்கள் என்றும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 4 பேர் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் சொல்கின்றன.உயிரிழந்த 9 பேரும் பெண்கள். அதில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. கொரோனா காரணமாக நான்கு மாதங்கள் வருமானம் இல்லாமல் இருந்த தொழிலாளர்கள், தொழிலை மீண்டும் தொடங்கிய அன்றே இத்தகைய விபத்தில் சிக்கியது வேதனை தருவதாக உள்ளது. முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட்ட பட்டாசு உற்பத்தியாக இருந்தாலும் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தி மு க தலைவர் ஸ்டாலின் அரசைக் கேட்டுக் கொண்டார் .

Tags: செய்திகள்

Share this