Breaking News

லால்பேட்டை மஸ்ஜித் தாருல் முத்தகீன் நீர் தேக்க தொட்டி கட்ட உதவிடுவீர்!

நிர்வாகி
0

சமுதாய சொந்தங்களே, லால்பேட்டை கொல்லிமலை கீழ் பாதி சிங்கார வீதி பின்புரம் ஜன்னத் நகரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மஸ்ஜித் தாருல் முத்தகீன் என்ற பள்ளிவாசல் உருவாக்கப்பட்டு வக்ஃபு செய்யப்பட்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள்.

இந்நிலையில் இப்பள்ளியின் தண்ணீர் தேவைக்காகவும், பள்ளியை சுற்றி 250 க்கும் மேர்பட்ட வீடுகள் இருக்கிறது இங்குள்ள வீடுகளுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிரம்மாக உள்ளது எனவே இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தும் முயற்சியை முன்னெடுத்துள்ளோம்.

அதற்காக பள்ளிக்குப் பக்கத்தில் உள்ள இடத்தில் ஒரு புதிய water Tank மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டி வருகிறோம்.

இப்பள்ளிக்கு சொத்துக்களோ இதர வருமானங்களோ இல்லை.

எனவே இப்பணிக்கு உதவும் பொருட்டு கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை வாங்கித்தர தாங்களும் முன் வர வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

என்ன பொருள் வேண்டும் என்பதை பள்ளியின் முத்தவல்லி. அவர்களையும் , பொருப்பாளர் அவர்களையும் அணுகிக் கேட்டு வாங்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

O. M. சாதிக் - 8098397430 பாரூக் - 9655025954

Tags: லால்பேட்டை

Share this