Breaking News

லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் 72 வது குடியரசு தின விழா கொடி ஏற்றம் !

நிர்வாகி
0

ஜனவரி 26 இன்று நம் இந்திய திருநாட்டின் 72 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் தேசிய கொடியினை நகர தலைவர் எஸ். எம். அப்துல் வாஜிது ஏற்றி வைத்தார். நகர செயலாளர் எம். எச். முஹம்மது ஆசிப் அனைவரையும் வரவேற்றார். நகர பொருளாளர் ஏ.தைய்யூப் முஹிப்பி நிகழ்ச்சியினை நெறிப்படுத்தினார்.

மாவட்ட துணை தலைவர் அனீசுர், நகர துணை தலைவர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மவ்லவி முஹம்மது ஹாமிம் கிராத் ஓதினார்.

லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் மஹல்லா ஒருங்கிணைந்த வார்டு கமிட்டி தலைவர் முஹம்மது அய்யூப் அவர்கள் குடியரசு தின உரை நிகழ்த்தினார்.

Tags: லால்பேட்டை

Share this