Breaking News

லால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா

நிர்வாகி
0

லால்பேட்டை தெற்கு தோப்பு பகுதியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சபியுல்லா தலைமை தாங்கினார் எள்ளேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பவித்ரா முன்னிலை வகித்தார். எள்ளேரி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் ஜெரால்டு மேரி கலந்து கொண்டு மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

லால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சங்கத் தலைவர் நஜீர் அஹமது சுகாதார ஆய்வாளர்கள் ராஜாராமன் ராமச்சந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வேலாயுதம் நவ்வர் உசேன் இஸ்மத்துல்லா மாரியப்பன் ராமலிங்கம் ரகமத்துல்லா, அன்வர்,திருஞானம் உள்பட ஜாஹிர் உசேன், கியாசுதீன், செவிலியர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த அம்மா மினி கிளினிக் அமைய முயற்சி செய்த காட்டுமன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் என். முருகுமாறன் அவர்களுக்கு நன்றி !

Tags: லால்பேட்டை

Share this