Breaking News

லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

நிர்வாகி
0

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் பணிக்குழு மாநாட்டில் பங்கேற்பது குறித்து லால்பேட்டையில் நடைபெற்ற காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதியிலிருந்து பங்கேற்பது குறித்து ஆலோசனைக்கூட்டம்.

இன்று 21.02.2021 மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு லால்பேட்டைநகர தலைவர். எஸ். எம் .அப்துல் வாஜிது தலைமை வகித்தார்.

நகர செயலாளர் முகம்மது ஆசிப் வரவேற்றுப் பேசினார்

மௌலவி தௌபிக் திருக்குர்ஆன் வசனம் ஓதினார்

நகர நிர்வாகிகளான எஸ் எம் ஹாமிது , பக்கீர் முஹம்மது. முஹிபுல்லா. ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மாநிலத் துணைத் தலைவர் தளபதி ஷபிகுர்ரகுமான்,மாவட்ட துணை தலைவர் .எஸ் .எம் அனிசுர்ரகுமான்,நகர பொருளாளர் .ஏ .எம். தைய்யூப், தேசிய கவுன்சில் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ரப்பானி, சிதம்பரம் மவுலானா எஸ்.ஏ. ஹிதாயத்துல்லா, நகர துணைத் தலைவர் ஏ.ஜே ஹிலூர்முஹம்மது, அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் மௌலவி அமீனுல்உசேன், கிபாயத்துல்லா நகர நிர்வாகிகள் கலீமுல்லாஹ்,முஹம்மது நாசர், உபைது ரஹ்மான்,மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் முபாரக்,நகர இளைஞரணி தலைவர் மஹபூப் அலி ரப்பானி,ஹிதாயத்துல்லா, மாணவர் அணி மாநில பொருளாளர் அஹமது, நகர தலைவர் அஸ்கர், முஷாஹிர்,அப்துல்லா யோகேஷ் ஆகியோர் பங்கேற்றனர் தேர்தல் பணிக்குழு மாநாட்டில் லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நகர நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags: லால்பேட்டை

Share this