துஆவை பெறுவோம் சுவனம் செல்வோம் : JMA பாசறை
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வாரில் 2012 ல் பட்டம் பெற்று அனைத்து உஸ்தாத்மார்களின்,,மன்பயீக்களின்,உலமாக்களின், ஊர் மக்களின் துஆவை பெற்று விட்டு சென்றோம் அல்ஹம்து லில்லாஹ்
மீண்டும் அந்த துஆவை பெறுவதற்காக 2012 ல் பட்டம் பெற்ற நாங்கள் 14.2.2021 ரஜப் பிறை 1 ல் ஆசிரியர்களை சந்தித்து துஆவை பெற்றுக்கொண்டோம் அல்ஹம்து லில்லாஹ்
ஆசிரியர்களின் உபதேசமும்,குஸுசிய்யத்தாக பாடமும் நடத்தப்பட்டது அல்ஹம்து லில்லாஹ்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் எங்களுக்குள் JMA பாசறை 2012 என்று ஆரம்பித்து உலமாக்களுக்கு மருத்துவ உதவிகளும், கடனுதவிகளும் செய்து கொண்டு வருகிறோம்,அதோடு இல்மின் தொடர்பில் இருப்பதற்காகவே எங்கள் நண்பர் மவ்லவி மதார் ஷாஹ் ஃபாஜில் மன்பயீ நஹ்வு பாடங்களும்,மவ்லவி ஜாஃபர் சாதிக் ஃபாஜில் மன்பயீ அரபி கற்றுக்கொள்ளவும் பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் அல்ஹம்து லில்லாஹ்
JMA பாசறை 2012 நண்பர்களின் சார்பாக சில மஷூரா செய்யப்பட்டது
இன்ஷா அல்லாஹ்
1.வருடம் ஒரு முறை ஆசிரியர்களை சந்தித்து துஆவை பெற்று கொள்வது
2.வருடம் வருடம் பட்டம் பெறும் மாணவர்களை கவுரவிப்பது
3.ஆசிரியர்களிடமும்,மன்பயீக்களிடமும், உலமாக்களிடமும் கட்டுரைகள் பெற்று பட்டமளிப்பு விழாவில் மலராக வெளியிடுவது
4.நம் ஜாமிஆவிற்கு மாணவர்களை தஷ்கீல் செய்து அனுப்புவது
5.வருடம் ஒரு முறை எங்களுக்குள் சந்தித்து மார்க்க பணிகளை மேலோங்க செய்வது
கண்ணியமிக்க ஆசிரியர்களே, பாசமிகு மன்பயீ உலமாக்களே தாங்கள் அனைவரும் எங்களின் மஷூராவிற்காக துஆ செய்யுங்கள்
ரஜப் பிறை 1 ல் 14.2.2021ஞாயிற்றுக்கிழமை காலை 12 மணியளவில் காலஞ்சென்ற நம் ஆசிரியர்கள்
அல்லாமா ஜெக்கரிய்யா ரஹ்
அல்லாமா அப்துர் ரப் ரஹ்
அல்லாமா அப்துல் அலி ரஹ்
அல்லாமா வஜிஹுல்லாஹ் ரஹ்
அல்லாமா ஜாகிர் ஹுஸைன் ரஹ்
இவர்களுக்காக குர்ஆன் ஒதியும்,திக்ராத்கள் ஓதியும் ஈஸால் சவாப் செய்யப்பட்டது
அல்லாமா அமானி ஹள்ரத் கிப்லாவின் மன்னறையை ஜியாரத் செய்து விட்டு, பொது கபூர்ஸ்தானில் நம் ஜாமிஆவின் அனைத்து ஆசிரியர்களையும் நிய்யத் வைத்து கொண்டு சூரத்துல் யாசின் ஓதியும், துஆவும் செய்யப்பட்டது அல்ஹம்து லில்லாஹ்
அல்லாஹ் நம் அனைத்து உஸ்தாத்மார்களின் மார்க்க பணிகளை கபூல் செய்து உயர்ந்த அந்தஸ்தை அல்லாஹ் வழங்குவானாக ஆமீன்
இன்ஷா அல்லாஹ்
JMA பாசறை 2012 ல் பட்டம் பெற்ற மவ்லவிகளின் சேவைகள் தொடரும்
Tags: லால்பேட்டை