Breaking News

காயிதேமில்லத் கண்டெடுத்த தளபதி ஷபீகுர் ரஹ்மான் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை உஹது தெருவில் இருக்கும் மர்ஹூம் அப்துல் முஹ்னி ஹஜ்ரத் அவர்களின் மகன் மர்ஹூம் ஃபைஜுர் ரஹ்மான் ஹள்ரத் அவர்களின் தம்பியும் உபைதுர் ரஹ்மான் அவர்களின் அண்ணனும் அப்துர் ரஹ்மான் ,அஹ்மது ,முஹம்மது இஸ்மாயில் தந்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவர் அல்ஹாஜ் மெளலவி காயிதேமில்லத் கண்டெடுத்த தளபதி ஷபீகுர் ரஹ்மான் அவர்கள் இன்று (10/03/2021) பகல் 1.00 மணியளவில் தாருல் பனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்.

அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது..

Tags: வஃபாத் செய்திகள்

Share this