லால்பேட்டை மேலத்தெரு ஹாஃபிழ் ஷகீல் அஹ்மது மறைவு
லால்பேட்டை மௌலவி ஹாஃபிழ் நூருல் அமீன் ஹஜ்ரத் கடலூர் மாவட்ட அரசு காஜி அவர்களுடைய மூத்த சகோதரியின் பேரனும் மேலத்தெரு சேர்ந்த சட்டி ஹாமீது அவர்களின் மகன் மவ்லவி ஹாஃபிழ் ஷகீல் அஹ்மது மன்பயீ அவர்கள் இன்று மாலை 26.04.2021 தாருல் பனாவைவிட்டு தாருல் ஃபக்காவை அடைந்துவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்...
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)
அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.
Tags: வஃபாத் செய்திகள்