Breaking News

கண்ணியமிகு காயிதே மில்லத் ரஹ் 126 ஆவது பிறந்தநாள் விழா ; நினைவிடத்தில் முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் மரியாதை!

நிர்வாகி
0

கண்ணியமிகு காயிதே மில்லத் ரஹ் 126 ஆவது பிறந்தநாள் விழா ; நினைவிடத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழக மாண்புமிகு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் மரியாதை!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தலைவர், இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க எல்லா தகுதியும் எம் தாய் மொழி தமிழ்மொழிக்கு உள்ளது என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய கண்ணியமிகு தலைவர் காயிதே மில்லத் ரஹ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று 5/6/2021 சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜித் அவர்களின் நினைவிடத்தில்

தமிழ் நாடு அரசு சார்பில் மாண்புமிகு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு துரை முருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலரப்போர்வை போர்த்தி மரியாதை செய்தனர்.

தேசிய கவுன்சில் உறுப்பினர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி பிரார்த்தனை செய்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநில பொதுச் செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர் Ex. MLA., மாநில முதன்மை துணை தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் Ex.M.P., மாநில துணை தலைவர் கே.நவாஸ் கனி M.P., தேசிய செயலாளர் எச். அப்துல் பாசித் Ex.MLA., மாநில செயலாளர் கே. எம். நிஜாமுதீன் மற்றும் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: செய்திகள்

Share this