Breaking News

அல் அய்ன் இந்தியன் சமூக நல மைய தலைவருடன் அய்மான் நிர்வாகிகள் சந்திப்பு

நிர்வாகி
0

அல் அய்ன் இந்தியன் சமூக நல மைய (ISC) தலைவர் முஸ்தபா எஸ். முபாரக் அவர்களை அய்மான் நிர்வாகிகள் நேற்று 17-06-2021 மாலை ஒரு சமூகப் பணி நிமித்தமாகவும், மரியாதைக்காகவும் நேரில் சந்தித்து ஆலோசனை செய்தனர். இந்த சந்திப்பில் ISC தலைவர் அல் அய்ன் இந்தியன் சமூக நல மையத்தில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் விரிவாக விளக்கினார். அய்மான் சங்கம் ஆற்றி வரும் எண்ணற்ற சமுதாயப் பணிகளை பாராட்டினார்.

இச்சந்திப்பு சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, அய்மான் பைத்துல்மால் செயலாளர் நிஜாம் மைதீன், நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் மற்றும் துணைப் பொருளாளர் பசுபதிக்கோவில் சாதிக் பாட்சா ஆகியோர் உடன் இருந்தனர். வரும் காலங்களில், இணைந்து பணியாற்றுவது என இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.

Tags: உலக செய்திகள்

Share this