Breaking News

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருக்கு சிறப்பான வரவேற்பளிக்க அனைவரும் வருக ..! முஸ்லிம் லீக் நகர செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆசிப் அறிக்கை!

நிர்வாகி
0
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான எம்.அப்துல் ரஹ்மான் சாஹிப் லால்பேட்டை வருகை
சிறப்பான வரவேற்பளிக்க அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என நகர செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆசிப் அறிக்கை!
05/09/2021 ஞாயிற்று கிழமை அன்று கடலூர் தெற்கு மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான எம்.அப்துல் ரஹ்மான் சாஹிப் அவர்கள் காலை 11:00 மணியளவில் லால்பேட்டையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தருகிறார்கள்.
நகர அலுவலகத்தில் தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது அவர்கள் தலைமையில் கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் ஏ.முஹம்மது ஜக்கரியா, செயலாளர் ஏ.சுக்கூர், தேசிய கவுன்சில் உறுப்பினர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, தெற்கு மாவட்ட பொருளாளர் சஹாபுதீன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பான வரவேற்பளிக்கப்படுகிறது.
கட்சியின் நிர்வாகிகள், இளைஞரணி மற்றும் மாணவரணியினர் திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எம்.ஹெச்.முஹம்மது ஆசிப்
நகர செயலாளர், IUML
லால்பேட்டை.
Cell: 9944192047

Tags: லால்பேட்டை

Share this