Breaking News

சிதம்பரத்தில் மீலாது நபி விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

நிர்வாகி
0
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று காலை சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பிரட் மற்றும் பழங்களும், மருத்துவ மனையில் இன்று பிறந்த 8 குழந்தைகளுக்கு புத்தாடைகளும், மதிய உணவுகளும் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது
சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள அன்பகம் முதியோர் இல்லம்,CCWE மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி, செம்மை முதியோர் இல்லம் ஆகிய இடங்களுக்கும் சென்று உணவுப் பொருட்கள் வழங்கினோம்.
கடந்த கால் நூற்றாண்டு காலமாக இதய வேந்தரின் உதய தினத்தன்று வழங்கப்பட்டு வரும் இந்த உதவி வழங்கும் நிகழ்வில் இ.யூ. முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவராக சேவையாற்றி மறைந்த தளபதி ஷஃபீகுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொள்வது வழமை.
இவ்வாண்டு இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி . நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தமிழ்நாடு தர்காக்கள் ஒருங்கினைப்பு குழு அமைப்பாளர் கவிஞர் மஹபூப் ஹுசைன், ஃபைசல் மஹால் முஹம்மது யாசீன் ஹாஜியார், மெளலானா கனியூர் இஸ்மாயில் நாஜி,கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஜெக்கரிய்யா,முத்தஸ்ஸஸர் ஹுசைன் ஆகியோரும்
நவாப் பள்ளி இமாம் மெளலவி ஹஜ் முஹம்மது ரப்பானி, அலி கான்,செய்யது முஹைதீன், ஜாக்கிர் ஹுசைன்,சிதம்பரம் நகர முஸ்லிம் லீக் செயலாளர் ஷாஹுல் ஹமீது பாகவி,மாவட்ட இளைஞர் அணித் தலைவர் முஹம்மது முஸ்தபா, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் இம்தியாஸ், மாநில எம்.எஸ்.எஃப் பொருளாளர் அஹமது, திமுக சிறுபான்மையினர் அணி நிர்வாகி ஹுஸைன், எள்ளேரி ஆரிபுல்லா, முபாரக் அலி, வழக்கறிஞர் நயாஜ் அஹமது, ஜியாவுதீன் அஹமது கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு செல்லும் வழியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள்,பரங்கிப்பேட்டை தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் திரு.கலையரசன்,திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் திரு.வெங்கடேசன் ஆகியோர் சந்தித்து மீலாதுந் நபி வாழ்த்துக்களை பரிமாரிக் கொண்டனர்.

Tags: சமுதாய செய்திகள்

Share this