Breaking News

லால்பேட்டை கமாலியா வீதி செய்யது அஹமது மறைவு !

நிர்வாகி
0

லால்பேட்டை கமாலியா வீதியில் இருக்கும் மர்ஹும் சோத்துப்பானை S. A. அப்துல் கப்பார் அவர்களின் மருமகனும், மர்ஹும் முஹம்மது யூசுப் அவர்களின் மகனும், முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, மவ்லவி நூருல் அமீன் ஆகியோரது மாமனாரும், முஹம்மது இம்ரான் தந்தையுமான செய்யது அஹமது அவர்கள் மதியம் 3 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)

அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this