Breaking News

லால்பேட்டை மஜக அலுவலகத்திற்கு சிந்தனைசெல்வன் MLA வருகை

நிர்வாகி
0
அக்29., கடலூர் மாவட்டம்., காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம. சிந்தனை செல்வன் MLA அவர்கள் லால்பேட்டை மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகத்திற்கு வருகை புரிந்து மஜக மாவட்ட செயலாளர் OR. ஜாகிர் ஹுசைன் தலைமையிலான மஜகவினரிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நலன் சார்ந்த கோரிக்கைகளையும், தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளையும் மஜகவினர் தெரிவித்தனர். நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.
வெற்றி பெற்றவுடன் மஜகவினர் வைத்த கோரிக்கைகளான அரசு கலை கல்லூரி, லால்பேட்டைக்கு அரசு மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் அமையும் என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வணிகர் அணி செயலாளரும், எள்ளேரி ஊராட்சி மன்ற துணை தலைவருமான AMK.முஹம்மது ஹம்ஜா, மாவட்ட துணை செயலாளர் ரியாஸ், துபை மாநகர பொருளாளர் பயாஜ், அபுதாபி மண்டல நிர்வாகி சாதுல்லா, நகர பொருளாளர் யூனுஸ், நகர நிர்வாகிகள் அப்ஸல், இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this