Breaking News

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி 78வது பட்டமளிப்பு விழா

நிர்வாகி
0
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 159ம் ஆண்டு விழா 78ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று 10.03.2022 காலை 9.00 மணியளவில் ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
ஜாமிஆ தலைவர் ஹாஜி J.அப்துல் ஹமீது தலைமை தாங்கினார் ஜாமிஆ செயலாளர் K.A.அமானுல்லாஹ் வரவேற்றார்.
பட்டமளிப்பு பேருரை மவுலவி சென்னை அடையார் மவுலவி சதீதுத்தீன் ஹள்ரத், சிந்தாமணிபட்டி மதராசத்துல் ஸஊதிய முதல்வர் மவுலவி சிராஜுதீன் அஹ்மது ரஷாதி ஹள்ரத் , திருச்சி மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மவுலவி A.முஹம்மது சிராஜுதீன் ஹள்ரத் மற்றும் ஜாமிஆவின் பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தவ்ரத்துல் ஹதீஸ் மவ்லவி ஃபாஜில், மவ்லவி ஆலிம், ஹாஃபிழ் ஆகியோருக்கு ஜாமிஆ முதல்வர் மவுலவி A.நூருல் அமீன் ஹள்ரத் ”ஸனது” பட்டம் வழங்கி வாழ்த்தினார்கள். ஜாமிஆ பொருளாளர் ஹாஜி S.A.அப்துல் அஹது நன்றி கூரினார்.


லால்பேட்டை பட்டமளிப்பு விழா..! பெண்கள் பயான்..!

Tags: லால்பேட்டை

Share this