Breaking News

ஆயங்குடியில் இஃப்தார்,ஈத் சந்திப்பு நிகழ்ச்சி..!

நிர்வாகி
0

 அமீரக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆயங்குடி அப்துல் மாலிக் அவர்கள் இல்லத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இஃப்தார் மற்றும் ஈத் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மண்டல பொருப்பாளர் மெளலவி தளபதி ஏ.எஸ்.அப்துல் ரப்பானி  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் 


சமுதாயப் புரவலர் "யன்பவுல் ஹைராத்" மெளலவி பி.ஏ.ஜாபர் அலி மன்பஈ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பிரதிநிதி முஹம்மது இக்பால், ஆயங்குடி நகரத் தலைவர் ஷஹாபுதீன்,லால்பேட்டை நகர தலைவர் அப்துல் வாஜிது, காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் மணிரத்தினம்,கும்பகோணம் மாநகராட்சி மேயர் திருமிகு.சரவணன், தில்லை மக்கீன், தாய்ச் சபை பாடகர் தேரிழந்தூர் தாஜுத்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







Tags: செய்திகள்

Share this