Breaking News

கத்தார் லால்பேட்டை ஜமாஅத் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

நிர்வாகி
0

 


அஸ்ஸலாமு அழைக்கும்


இன்று மாலை 10.06.2022 அல்-முன்தாஜா பார்க்-ல்

கத்தார் லால்பேட்டை ஜமாஅத் தலைவர்

S.A யக்கீன் அஹ்மத் அவர்கள் தலைமையில்

 *கத்தார் லால்பேட்டை  ஜமாஅத்* ன் 

செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


இதில் ஜமாத்தின் முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கீழ் காணும் தீர்மானக்களுக்கு ஒப்புதல் வழங்கினர்.


**நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றி தவறாக பேசிய பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா மற்றும் நவின் ஜின்டா பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.*


**IUML லால்பேட்டை நகர செயலாளர் M.H முஹம்மது ஆசிப் அவர்கள் மறைவையொட்டி  மஃபிரத்திர்காக துஆ செய்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*


**ஜமாஅத் திடம் பொருளாதார உதவி வேண்டி வரும்  மனுக்கள்* 

*கல்வி உதவிகள்,*

*மருத்துவ உதவிகள்,*

*திருமணம் உதவிகள்* *மற்றும் பள்ளி வாசல் பராமரிப் பணிகான தொகை நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*


**நமதூரில் இருந்து வேலை தேடி வரும் சகோதரர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*


*நமதூரில் இலவச பொது மருத்துவ முகாம், கத்னா முகாம் மற்றும் தனி நபர் வாழ்வாதார உதவிகள் வரும் காலங்களில் செய்வதென தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.*


லால்பேட்டை ஹெல்த் கேர்கான மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு கத்தார் லால்பேட்டை ஜமாஅத் சார்பில் 30 நபர்கள் பரிந்துரை செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது 

மற்றும் ஜமாஅதின் எதிர்கால நல திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்க பட்டது.


இவண் 

கத்தார் லால்பேட்டை ஜமாஅத்

Tags: லால்பேட்டை

Share this