Breaking News

லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை நடத்திய இலவச நரம்பு பரிசோதனை முகாமில் சுமார் 140 க்கு மேற்பட்டோர் பயனடைந்தனர்!!

நிர்வாகி
0

லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளையின் சார்பில்  இலவச மருத்துவ முகாம் வல்ல ரஹ்மானின் நாட்டத்தால், இன்று 16-07-2022 காலை 9:00 முதல் மாலை 5:00 வரை, லால்பேட்டை சுகாதார மையம் (LALPET HEALTHCARE CENTRE) வளாகத்தில் இலவச நரம்பு பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது, 


இதில் கால் வலி, கால் மரமரப்பு, மூட்டு வலி, கால் நரம்பு பிரச்சனைகள், கால் வீக்கம் ஆகிய பரிசோதனைகளை பொதுமக்களுக்காக இலவசமாக மேற்கொண்டார்கள்.


இதில் லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து 140 க்கும்  அதிகமான பயனாளிகள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர். அனைவருக்கும் கட்டணம் இல்லா மருத்துவ பரிசோதனையும், கட்டணம் இல்லா ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.


இதில் கலந்துகொண்ட *சிறப்பு  மருத்துவர்கள், லால்பேட்டை சுகாதார மையம் (LHC) மருத்துவர்கள்,ஊழியர்கள்* மற்றும்  இந்த ஏற்பாட்டை சிறப்பாக முன்னின்று நடத்திய *லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் , அனைத்து வெளிநாடு வாழ் லால்பேட்டை ஜமாத்* நிர்வாகிகள் அனைவருக்கும் மருத்துவ அறக்கட்டளையின் நிர்வாகிகள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்  .


என்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக…

*லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை*




Tags: லால்பேட்டை

Share this