Breaking News

லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா..!

நிர்வாகி
0

 


சாதனையாளர்களுக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கும் விழா. உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவதூறாக பேசிய பாஜக நிர்வாகிகளை கண்டித்தும் - சிறுபான்மை சமூகத்திற்கு பாதுகாப்பை வலியுறுத்தியும் மாபெரும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோட்டில் நகரத் தலைவர் அப்துல் வாஜிது தலைமையில் நடைபெற்றது.


நகர துணைத் தலைவர் அமீருல் ஹுசைன் வரவேற்புரை ஆற்றினார்.

நகர செயலாளர் முஹம்மது தைய்யூப் முஹிப்பி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பொறுப்பாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி துவக்க உரையாற்றினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹமது அபுபக்கர்,மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கி, சென்னை மண்டல மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.ஜெத்தூன், செங்கல்பட்டு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஹசன் பாத்திமா, புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் முகமது அலி மரைக்காயர், ஆயங்குடி ஜாஃபர் அலி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே எம் காதர் மொகிதீன் ஆம்புலன்ஸை அர்ப்பணித்து இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பளிக்கு காயிதே மில்லத் முன்மாதிரி பள்ளி விருது, மகப்பேறு மருத்துவப் பணிக்காக சிராஜுல் மில்லத் விருது டாக்டர் ஏ.ஜீனத்துன்னிசா,, முன்மாதிரி மகளிர் மார்க்க அறிஞருக்கான ஷிஹாப் தங்ஙள் விருது ரஜியா பேகம் ஆகியோருக்கு வழங்கி நிறைவு பேருரை ஆற்றினார்.


மாவட்ட பிரதிநிதி எம் ஜே மசூத் நன்றி கூறினார்.    

நிகழ்ச்சியின் காணொளியை காண...

https://youtu.be/Uz5qzw_l1bI

நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தலைவர் ஜெக்கரிய்யா, செயலாளர் சுக்கூர், பொருளாளர் சஹாபுதீன், லால்பேட்டை நகர பொருளாளர் எம்.ஹெச்.முஹிப்புல்லாஹ், அனைத்து ஊர்களின் பிரைமரி நிர்வாகிகள், மாவட்ட, நகர, நிர்வாகிகள்  மாணவர் அணி, இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.




Tags: லால்பேட்டை

Share this