லால்பேட்டையில் நடைபெற்ற இறைவேதம் அழைக்கிறது நிகழ்ச்சி..!
எல்லா புகழும் ஏக இறைவன் ஒருவனுக்கே
இன்று லால்பேட்டை நூர் மஹாலில் நடைபெற்ற இறைவேதம் அழைக்கின்றது சமூக நல்லிணக்க நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்து தந்தனர்
இந்நிகழ்ச்சியில் மிக அருமையான முறையில் சகோதரத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்த சிறப்பு அழைப்பாளர்கள்
B.ஜான் போஸ்கோ
தமிழக ஆயர் பேரவையின் அன்பிய பொதுச் செயலாளர்
S.M பாக்கர்
இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர்
P.M. அல்தாஃபி M.A.,
ஏகத்துவம் முஸ்லிம் ஜமாத் மாநில பொதுச் செயலாளர்
சிவதிரு திருவடிக்குடில்
நிறுவனர் ஜோதிமலை இரைப்பணி கும்பகோணம்
சகோதரர்களாக ஒன்றிணைந்து சமுதாய மக்களுக்கு சமூக நல்லிணக்கத்தை பற்றி சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து தந்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்த ஆண்டு நடைபெற்ற அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டி விருது வழங்கப்பட்டது.
மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு காரணமாக இருந்த அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட திருகுடில் சுவாமி சகோதரர் ஜான் போஸ்கோ மற்றும் பிற மத சகோதரர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் அறிஞர்கள் எழுதிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் காணொளியை காணா... https://youtu.be/EWlixKR43K0
IDC Media
Tags: லால்பேட்டை