Breaking News

தூதரக அதிகாரிகளுடன் அய்மான் நிர்வாகிகள் சந்திப்பு..!

நிர்வாகி
0

 



அய்மான் சங்கத்தின் சார்பாக இன்று 12/08/2022, வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில், அபுதாபி இந்திய தூதரகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள  உயரதிகாரியும், தூதரக ஆலோசகருமான முனைவர் பாலாஜி ராமசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.


தொடர்ந்து அவர்களிடம் கடந்த 42 வருடங்களாக அமீரக மண்ணிலே அய்மான் சங்கம் செய்து வரும்  சமூக, மனித நேயப் பணிகளை எடுத்துரைத்தோம். 


முனைவர் பாலாஜி அவர்கள் அனைத்து தகவல்களையும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்கள்.


மேலும் அய்மான் நிர்வாகிகளை அன்போடு வரவேற்று, அய்மான் செய்து வரும் சமூகப் பணிகளை மன மகிழ்வோடு பாராட்டினார்கள்.


 இச்சந்திப்பு நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் நீடித்தது. 


 இந்த சந்திப்பில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H.M.முஹம்மது ஜமாலுதீன், பைத்துல் மால் தலைவர்  அதிரை ஏ ஷாஹுல் ஹமீது ஹாஜியார், நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் மற்றும் செயற்குழு உறுப்பினர் கீழக்கரை செய்யது முகம்மது பாசில் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Tags: உலக செய்திகள்

Share this