Breaking News

லால்பேட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்த நாள் விழா...!!

நிர்வாகி
0

 லால்பேட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்த நாள் விழா...!!

பேரூராட்சி  பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும்  இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...!

                    

                காங்கிரஸ் கட்சி தலைவர்

கே.எஸ். அழகிரி அவர்களின்  71-வது

பிறந்தநாள் விழா லால்பேட்டையில்

இன்று  மிகவும்  உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

                   

                   இதையொட்டி லால்பேட்டை

பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை

பணியாளர் 36 பேர் அலுவலகப் பணியாளர்  15 பேர்   மொத்தம்              

51 பணியாளர்களுக்கு  "மாவட்டதுணைத்

தலைவர்  நஜீர் அஹமது " சால்வை அணிவித்து  வேட்டி,சேலை, பேண்ட்,ஷர்ட்

மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பு செய்தார்.

 மூத்த காங்கிரஸ் தலைவர் தவர்தாம்பட்டு விஸ்வநாதன், விழாவிற்கு தலைமை தாங்கினார்.

 விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர்  இளங்கீரன், காங்கிரஸ் கட்சி செல்வம்,வாசு,ஆரிப்,கலீமுல்லா,உபைதுகொல்லிமலை சுப்ரமணி,ஆட்டோமணி,

போட்டோஜெய்கர் மற்றும் கவுன்சிலர்

ஜாக்கீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

   ஆடூர் முருகன் நன்றி கூறினார்.



Tags: லால்பேட்டை

Share this