Breaking News

MSF தலைமைத்துவ பயிற்சி முகாம்..!

நிர்வாகி
0

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அணியாக விளங்கும் முஸ்லிம் மாணவர் பேரவை (எம் எஸ் எஃப்) என்ற அமைப்பு அக்கட்சியின் தேசிய அளவிலான மாணவர் அமைப்பாக விளங்குகிறது.


இந்த அமைப்பில் அங்கம் வகித்து பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயலாற்றி கட்சியினுடைய உயர் பொறுப்புகளிலும்  அரசியலில் உயர் பொறுப்புகளையும் வகிக்கும் அளவிற்கு மாணவர் பருவத்தில் இருந்து அனைத்து விதமான பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.


இந்தியாவில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் போன்றவற்றில் எம் எஸ் எஃப் வலுவாக தனது தளத்தை உருவாக்கி வைத்திருக்கிறது.


பல்வேறு போராட்டங்களை முன்னிறுத்தி அரசியல் களம் காணும் இயக்கங்களுக்கு மத்தியில்,படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்,படிக்கும் காலங்களில் ஒழுக்கத்தோடு கல்வி கற்கவும்,கல்வி கற்கக்கூடிய காலங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் அரசியல் வழிமுறைகளையும் தரமாக கற்றறிந்து சமூகத்திற்கு பணியாற்றும் அளவிற்கு எம் எஸ் எஃப் வுடைய அங்கத்தினர்கள் பயிற்றுவிக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு சமுதாய அரசியல் களத்திற்கு வருகிறார்கள்.


அதன் அங்கமாக தமிழ்நாடு மாநில முஸ்லிம் லீக்கின் எம் எஸ் எஃப் -ன் சார்பில் மூன்று தினங்கள் சென்னை கோவளத்தில் நடைபெற உள்ள தலைமைத்துவ பயிற்சி முகாமில் தமிழகத்தினுடைய பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற இருக்கிறார்கள்.


புதிய கோணத்தில் புதிய உத்வேகத்தோடு பயிற்சி பெற்று நாளைய அரசியல் களத்திற்கு தயார்படுத்தப்படும் இத்தகைய நிகழ்வுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்றுவது காலத்தின் கட்டாயம்.


மூன்று நாள் msf பயிற்சி முகாம் வெற்றியடைய இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.






Tags: செய்திகள்

Share this