Breaking News

லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (#PIMS) இணைந்து நடத்திய இலவச எலும்பு மூட்டு நோய் பரிசோதனை முகாம்

நிர்வாகி
0

 

லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (#PIMS)  இணைந்து நடத்திய  இலவச எலும்பு  மூட்டு நோய்  பரிசோதனை முகாமில் சுமார் 230 க்கு மேற்பட்டோர் பயனடைந்தனர்!!


புகழ் அனைத்தும் இறைவனுக்கே..!!


லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி  மருத்துவ  விஞ்ஞான நிறுவனம்  இணைந்து  இலவச மருத்துவ முகாம் வல்ல ரஹ்மானின் நாட்டத்தால், இன்று 23-11-2022 காலை 9:00 முதல் மதியம்  2:00 மணிவரை, லால்பேட்டை சுகாதார மையம் (LALPET HEALTHCARE CENTRE) வளாகத்தில் இலவச எலும்பு  மூட்டு நோய் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது, 


இதில் எலும்பு  மூட்டு நோய் சம்பந்தமான மூட்டு  வியாதிகள், எலும்பு  கட்டிகள்,இடுப்பு தேய்மானம், எலும்பு முறிவுகள், கை கால் ஊனம்,மூட்டு தேய்மானம்    ஆகிய பரிசோதனைகளை பொதுமக்களுக்காக இலவசமாக மேற்கொண்டார்கள்.


இதில் லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து 230 க்கும் அதிகமான பயனாளிகள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர். இதில் 62 பயனாளிகள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்,அனைவருக்கும்  கட்டணம் இல்லா மருத்துவ பரிசோதனையும், கட்டணம் இல்லா ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.


இதில் கலந்துகொண்ட சிறப்பு  மருத்துவர்கள், லால்பேட்டை சுகாதார மையம் (LHC) மருத்துவர்கள்,ஊழியர்கள் மற்றும்  இந்த ஏற்பாட்டை சிறப்பாக முன்னின்று நடத்திய லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் , அனைத்து வெளிநாடு வாழ் லால்பேட்டை ஜமாத் நிர்வாகிகள் அனைவருக்கும் மருத்துவ அறக்கட்டளையின் நிர்வாகிகள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்  .


என்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக…

லால்பேட்டை_மருத்துவ_அறக்கட்டளை

.







Tags: லால்பேட்டை

Share this