கத்தார் வரலாற்றில் முதல் முறையாக 42 அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய தமிழர்களுக்கான கெளரவிப்பு வெற்றி விழாவில் கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் சார்பில் வாழ்த்துரை!
தோஹா 17, 2023
கத்தாரில் இந்திய தூதரகத்தின் கீழ் இயங்கும் இந்திய சமூக நல மன்றம் ICBF, இந்திய கலாச்சார மையம் ICC & இந்திய விளையாட்டு மையம் ISC ஆகிய துணை அமைப்புகளின் மேலாண்மை குழுவில் முதன் முதலாக வெற்றி பெற்று பொறுப்பு ஏற்றிருக்கும் திரு.மோகன் குமார் , திரு.ராமசெல்வம், திரு.சமீர் அஹமது, திரு ஸ்ரீநிவாசன், திரு.புருஷோத்தமன் ஆகிய ஐந்து தமிழர்களுக்கான கெளரவிப்பு விழா கடந்த ஏப்ரல் 17, 2023 அன்று ICC அசோகா அரங்கில் நடைபெற்றது.
இதில் கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் சார்பில் அஹமது ரிலா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு நன்றி தெரிவித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
இவ்விழாவைவில் வெற்றியாளர்களுக்கு திருவள்ளுவர் சிலையை வழங்கி கொளரவித்தனர்.
இந்நிகழ்வில் கத்தாரில் உள்ள 42க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Tags: உலக செய்திகள்