Breaking News

மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்களின் இல்ல மணவிழா ; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

நிர்வாகி
0

 

திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினரும், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான வேங்கையின் மைந்தர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்களின் மகள் Dr.M.R K.P. கண்மனி M.D., அவர்களுக்கும் Dr.K.சித்தார்த் M.D., அவர்களுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 24/10/2023 செவ்வாய் கிழமை மாலை சென்னை திருவான்மியூர் ஶ்ரீராமச்சந்திர கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. 


திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு தளபதி திரு.மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், தோழமை கட்சி தலைவர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


*இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்* மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, லால்பேட்டை நகர செயலாளர் ஏ.முஹம்மது தையூப் முஹிப்பி, நகர பொருளாளர் எம்.எச்.முஹிப்புல்லா, இளைஞர் அணி மாநில அமைப்பு குழு உறுப்பினர் ஏ.எஸ்.அஹமது ஆகியோர் மணமக்களுக்கு நேரில் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.







Tags: செய்திகள்

Share this