Breaking News

லால்பேட்டை நகருக்கு வருகை தந்த தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு !

நிர்வாகி
0

 

லால்பேட்டை நகருக்கு 31/12/2023 ஞாயிற்று கிழமை அன்று வருகை தந்த தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும், மாநில துணை தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி., அவர்களுக்கும் வரவேற்பு நிகழ்ச்சி நகர அலுவலகத்தில் காலை 10:30 மணியளவில் நடைபெற்றது.


நகர தலைவர் எஸ்.எம் அப்துல் வாஜிது தலைமை வகித்தார்.


கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.முஹம்மது ஜெக்கரியா, மாவட்ட துணை தலைவர்கள் அனீசுர் ரஹ்மான், கொள்ளுமேடு மவ்லவி முஹம்மது ஹாரிஸ் மன்பஈ, மாவட்ட துணை செயலாளர் பி.ஜே.மசூது அஹமது, மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நகர செயலாளர் ஏ.முஹம்மது தையூப் முஹிப்பி வரவேற்புரையாற்றினார்.


மாநில துணைச் செயலாளர் மவ்லவி ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி வாழ்த்துரை வழங்கினார்.


தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில துணை தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி., ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.


தலைமை நிலைய பேச்சாளர் யூ.சல்மான் பாரிஸ் நன்றி கூறினார்.

நகர துணை தலைவர் மவ்லவி அமீனுல் ஹுசைன் மன்பஈ துஆ ஓதினார்.


நிகழ்ச்சியில் ஊடகவியாளர் திருச்சி சாகுல் ஹமீது, சிதம்பரம் நகர தலைவர் அன்வர் அலி, பொருளாளர் அப்துல் ரியாஜ், லால்பேட்டை நிர்வாகிகள்: எம்.ஹெச்.முஹிப்புல்லா, வி.ஏ.அப்துர் ரஹ்மான், கவிஞர் ஏ.எம்.முஹிப்புல்லா, மவ்லவி ஏ.ஏ.முஹம்மது மன்பஈ, எஸ்.எம்.முஹம்மது ஹாமிது, எம்.ஹெச்.முஹம்மது பஷீர், மவ்லவி எம். முஹம்மது அய்யூப் மன்பஈ, ஏ.எஸ் .அஹமது, எம்.பக்கீர் முஹம்மது, மவ்லவி ரஹ்மத்துல்லா ஜமாலி, எஸ்.பக்கீர் முஹம்மது, எம்.அமானுல்லா, எம்.எஸ்.முஹம்மது சித்தீக், எஸ்.ஏ.அபுசுஹுது, முஹம்மது ஹாமிம் பைஜி, மவ்லவி செய்யது அஹமது மிஸ்பாஹி, முஹம்மது இலியாஸ், எம்.ஏ.ஜியாவுத்தீன்,  ஜாஃபர் அலி, கொள்ளுமேடு இம்தியாஜ், சிங்கப்பூர் பொறியாளர் எஃப்.முஹம்மது, ஏ.சாதுல்லா, மவ்லவி இஸ்மத்துல்லா, உஜைர் அஹமது, ஜாகிர் ஸ்டோர் ஹஜ்ஜி முஹம்மது, முஹம்மது நாஸர், அப்துல் ரஷீத், மெயின் ரோடு மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லி ஹஜ்ஜி முஹம்மது, முஹம்மது ஹாஜா, முஹம்மது இப்ராஹிம், முஹம்மது ஹசன், ஹிதாயத்துல்லா, ஆஷிக், முஹம்மது ஹாசிம், முசாஹிர், முஹம்மது தஸ்லிம், ஆட்டோ நிஜாம், முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








Tags: லால்பேட்டை

Share this