Breaking News

லால்பேட்டையில் மார்ச் 10 நிறுவன தின விழா கொடி ஏற்றம் !

நிர்வாகி
0

 


 இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிறுவன தினமான மார்ச் 10 ஞாயிற்று கிழமை காலை 7 மணியளவில் லால்பேட்டை காயிதே மில்லத் சாலை மெளலானா வீதி நுழைவு வாயிலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி ஏற்று விழா நடைபெற்றது.


நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது தலைமை வகித்தார். 


நகர செயலாளர் ஏ.முஹம்மது தையூப் முஹிப்பி அனைவரையும் வரவேற்றார்.


மாவட்ட துணை தலைவர்கள் அனீசுர் ரஹ்மான், மவ்லானா முஹம்மது ஹாரிஸ், தலைமை நிலைய பேச்சாளர் யூ.சல்மான் பாரிஸ், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மூத்த தலைவர் கவிஞர் ஏ.எம்.முஹிப்புல்லா நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.


மாநில துணைச் செயலாளர் ஏ எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி நிறுவன தின விழா உரையாற்றினார்.


நகர பொருளாளர் எம்.ஹெச். முஹிப்புல்லா நன்றி கூறினார்.


கட்சியின் நிர்வாகிகள் மவ்லவி முஹம்மது அய்யூப் மன்பஈ, வி ஏ அப்துர் ரஹ்மான், எம்.எஸ்.முஹம்மது சித்தீக், எஸ். ஏ.அபுசுஹுது, பக்கீர் முஹம்மது, முஹம்மது ஹாமிது, மவ்லானா முஹம்மது ஹாமீம் பைஜி, ஹிதாயத்துல்லா, ஏ.எஸ்.அஹமது, காயிதே மில்லத் பேரவை அஸ்கர் ஹுசைன், கொள்ளுமேடு இம்தியாஜ், முஜம்மில், மவ்லானா ஜியாவுதீன் பாக்கவி, மவ்லானா ரஹ்மத்துல்லா, முஷாஹிர், ஹாசிம், ஆசிக் அலி, முஹம்மது தஸ்லிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




Tags: லால்பேட்டை

Share this