Breaking News

அய்யம்பேட்டையில் தப்ஸீர் அஷ்ஷஃராவி சூரா யாஸீன் வெளியீட்டு விழா நடைபெற்றது..!

நிர்வாகி
1

 தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அஞ்சுமன் அறிவக வளாகத்தில் தப்ஸீர் அஷ்ஷஃராவி சூரா யாஸீன் வெளியீட்டு  விழா  10-3-2024 ஞாயிறு மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றுது. 

விழாவுக்கு அஞ்சுமன் அறிவக நிறுவனர் அல்ஹாஜ் D.M. ஜபருல்லாஹ் அவர்கள் தலைமை வகித்தார்.

எனது மருமகன், சென்னை M.C. Road மத்ரஸா மதீனதுல் ஹுதா ஹிப்ளு பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிள் A. பைஜுல் அமீன் காஃஷிபி ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். 

அய்யம்பேட்டை ரயிலடி மஸ்ஜித் தலைவர் வாலன் சுலைமான் பாட்சா வரவேற்புரையாற்றினார்.

அஞ்சுமன் மஸ்ஜித் வளாக செயலாளர் அல்ஹாஜ் SPJ முபாரக் தொகுப்புரையாற்றினார்.


அஞ்சுமன் மஸ்ஜித் தலைவர் ஹாஜி SKM பகீர் முஹம்மது, முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் SPJ இல்யாஸ், அஞ்சுமன் மஸ்ஜித் தலைமை நிலைய நிர்வாகி வல்லம் பாஷா ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


முஸ்லிம் பரிபாலன ஜமாஅத் சபை தலைவர் ஹாஜி சிம்லா நஜீப், பரிசுக்கார  அப்துல் முஹம்மது தம்பிதுரை, ஹாஜி ஈமான் பஷீர் அஹமது, அஞ்சுமன் மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா மௌலவி அப்துல் மாலிக் மன்பயீ , ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம், தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை துணைத் தலைவர் மௌலானா மௌலவி B.M. ஜியாவுத்தீன் ஹஜ்ரத், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


துபை ஈமான் சங்க முன்னாள் துணை தலைவர் பெரம்பலூர் மௌலானா மௌலவி தாவூத் அலி ஹஜ்ரத், 

சவூதி அரசின் இஸ்லாமியத் துறை மேனாள் பிரதிநிதி மதுரை மௌலானா மௌலவி அஷ்ஷைக் முஹ்யித்தீன் மதனீ ஆகியோர்  உரையாற்றினர். 


கீழக்கரை டவுன் காஜி, திருச்சி அய்மான் பெண்கள் கல்லூரி தலைவர் மௌலானா மௌலவி Dr. காதர் பக்ஷ் ஹஜ்ரத் அவர்கள் தப்ஸீர் அஷ்ஷஃராவி சூரா யாஸீன் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.


துபை தொழிலதிபர், அய்மான் மகளிர் கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் M.Y. ஹபீபுல்லாஹ் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு அணிந்துரையாற்றினார். 


தப்ஸீர் அஷ்ஷஃராவி மொழிபெயர்ப்பாளர் மௌலானா மௌலவி M.Y. முஹம்மது அன்சாரி மன்பயீ ஹஜ்ரத் அவர்கள் ஏற்புரையாற்றினார். 


லால்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா மௌலவி நூருல்லாஹ் ஹஜ்ரத், இமாம் கஜ்ஜாலி மேல்நிலைப்பள்ளி, அல்ஹாஜ் ஜாஃபர் அலி, வசந்தம் மினிபஸ் ஹாஜி முஹம்மது அய்யூப், சமூக நல ஊழியர் ஹாஜி அனீசுர்ரஹ்மான், கந்தகுமாரன் சுகர்னோ, தப்ஸீர் அஷ்ஷஃராவி பதிப்பக செயலாளர் முஃபீத் அஹ்மத், மௌலவி சகீன் அஹ்மத் ஜமாலி மற்றும் அய்யம்பேட்டை மஸ்ஜித்களின் முதவல்லிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


லால்பேட்டை அல்அலீம் அத்தர் மற்றும் ஹஜ் உம்ரா சர்வீஸ் நிறுவனர் அல்ஹாஜ் மௌலவி M.Y. அப்துல் அலீம் சித்தீக் நன்றியுரையாற்றினார்.


திரளான அய்யம்பேட்டை மற்றும் லால்பேட்டை பிரமுகர்கள் பொதுமக்கள், பெண்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.







Tags: சமுதாய செய்திகள் லால்பேட்டை

Share this

1 Comments