Breaking News

ரியாத் காயிதேமில்லத் பேரவை சார்பில் சமூக வாழ்வியல் கலந்தாய்வு கூட்டம்.

நிர்வாகி
0

 


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெளிநாடு அமைப்பான காயிதேமில்லத் பேரவை - ரியாத் சார்பில் சமூக வாழ்வியல் கலந்தாய்வு கூட்டம் பத்தா டி-பேலஸ் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.


ரியாத் காயிதேமில்லத் பேரவை தலைவர் சுலைமான் பைஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.


தாயகத்தில் இருந்து காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் M.அப்துல் ரஹ்மான், msf தேசிய துணைத் தலைவராகிய புளியங்குடி அமீன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்


சவுதி காயிதேமில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் லால்பேட்டை முகம்மது நாஸர், செய்தி தொடர்பாளர் அய்யம்பேட்டை அர்ஷத் உள்ளிட்டோர் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.




Tags: உலக செய்திகள்

Share this