சவூதி அரேபியா ரியாத் அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமாத் 12ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது..!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமாத் சவூதி அரேபியா ரியாத் 12ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் 03-01-2025 வெள்ளிக் கிழமை ரியாத் பத்ஹாவில் உள்ள அஸல் கேன்டீன் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆரம்பமாக ஹாபிஸ் யாசிர் அரபாத் கிராத் ஓதி துவங்கி வைத்தார்.
ஜமாத்தின் தலைவர் மௌலவி ரியாஜூல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்
ஜமாத்தின் முன்னாள் நிர்வாகிகள் மௌலவி T Nஜாபர் அலி,ஜனாப் லியாகத் அலி ஜின்னா,ஜனாப் M A முஹம்மத் சாதிக், ஜனாப் முனவ்வர் ஹுசைன், ஜனாப் T A அமீரூல் ஹக்,ஜனாப் முஹம்மத் ஆரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜமாத்தின் பொருளாளர் S.M முஹம்மது நாசர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
ஜமாத்தின் செயலாளர் M. ரஹமத் துல்லாஹ் ஜமாத்தின் 2024ம் ஆண்டு வரவு செலவு கணக்கு ஆண்டரிக்கை சமர்ப்பித்தார்.
ஜமாத்தின் தணிக்கையாளர் ஜனாப் M A இம்தாதுல்லாஹ் அவர்கள் ஜமாத்தின் செயல்பாடுகள்,சந்தா மற்றும் ஜெத்தா மண்டலதிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளை பொதுக்குழுவில் ஆலோசனை செய்யப்பட்டது.
தாயகத்தில் இருந்து வருகை தந்த மௌலானா மௌலவி M Y அப்துல் அலீம் சீத்தீக் பாஜில் மன்பயி
அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்..ஜமாத்தின் முன்னாள் செயலாளர் ஜனாப் T A அமீருல் ஹக் அவர்கள்
நன்றியுரை நிகழ்த்தினார்.
இறுதியாக துஆ மஜ்லிஸ் மற்றும் விருந்து உபசரிப்புடன் விழா இனிதே நிறைவுற்றது.... அல்ஹம்துலில்லாஹ்..
இந்த நிகழ்வில் உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Tags: லால்பேட்டை