22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி
J.நூருல்அமீன்
0
சென்னை: முழு சூரிய கிரகண தினமான வருகிற 22ம் தேதி ஜப்பான் கடல் பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்படும். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சுனாமி தாக்கும் என்று ஒரு எஸ்.எம்.எஸ் தகவல் படு வேகமாக பரவி வருகிறது.
இமெயில், எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பப்பட்டு வரும் இந்த தகவல், உலக நாடுகள் பலவற்றிற்கும் போய்க் கொண்டிருக்கிறது.அந்த மெயிலில் உள்ள தகவல் இதுதான்...வரும் 22ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. 6 நிமிடம் 39 விநாடிகள் நீடிக்கும் இந்த கிரகணத்தின் போது, சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியை வழக்கத்தை விட வேகமாக இழுக்கும்.
இதனால், பூமிக்கு ஆதாரமாக விளங்கும் பிளேட்டுகள் நகர்ந்து பயங்கர பூகம்பம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.ஜப்பானின் தெற்கு பகுதியில் பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 22ம் தேதி இந்திய நேரப்படி மதியம் 11.30க்கு பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிக்கு மேல் பதிவாகும் இந்த பயங்கர பூகம்பத்தால் சுனாமி உருவாகும் அபாயம் இருக்கிறது.
அடுத்த 2 மணி நேரத்தில் ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவையும், 4 மணி நேரத்துக்கு பின் மதியம் 3.30 மணிக்கு இந்தியா, இலங்கை, மாலத்தீவு கடலோர பகுதிகளையும் பேரலைகள் தாக்கும். இந்த சுனாமியில் இருந்து தப்பிக்க கடலோர பகுதிக்கு செல்லாதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த எஸ்.எம்.எஸ்., இமெயில் தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags: புரளி