Breaking News

சமுதாயப் பார்வையில் ஒரு சட்ட மசோதா...!

நிர்வாகி
0
சமுதாயப் பார்வையில் ஒரு சட்ட மசோதா திருமணங்களை கட்டாயாக பதிவு செய்யும் சட் முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்ற நடப்பு கூட்டத் தொடரில தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
.
இஸ்hமிய ஷரீஅத் சட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முன்னோட்டமாக இது அமைந்து விடுமோ என்ற அச்ம் முஸ்லிம் சமுதாயத்திற்கு இன்றுஏற்பட் டுள்ளது.
இந்த கவலையில் அக்கறை கொண்ட சமுதாயத்தின் தாய்ச்சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய அமைப்புக்களை ஒன்றிணைத்து ஆலோசனைக் கூட் டத்தை சென்னையல் நடத்தியது.
.
இதில் பங்கேற்றோர் வெளிப்படுத்திய கருத்துக்கள் தமிழக அரசின் பரிசீலனைக்கு உரியவை என்பதோடு, சமுதாயம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியவை.
இதோ அந்த கருத்துக்களில் சில....
.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய
பொதுச் செயலாளர் பேராசிரியர்
கே.எம். காதர் மொகிதீன்
.
இன்று தமிழக அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருமண கட்டாயப் பதிவு சட்ட மசோதா இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்த ஒரு தீர்ப்பின்படி கொண்டு வரப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல் படுத்துவது ஒவ்வொரு மாநிலத்தின் கட்டாய கடமை. இந்த சட்டத்தின் நோக்கம் தவறானது அல்ல.
.
சுயமரியாதை திருமணங்கள் நடப்பதே தமிழ்நாட் டில்தான். இந்த சட்ட முன்வடிவை படித்ததும் மாநில அரசு திருமணங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்க நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றியுள்ளது தெரிகிறது. இப்போது திருமணங்கள் பதிவாளர் அலுவலகங் களில் பதிவு செய்யச் சொல்வது பொதுவான சிவில் சட்டத்திற்கு முன்னோட்டமாக அமைந்து விடும் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
ஒரேவிதமான சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சில அரசி யல் கட்சிகளும், இந்துத் துவ அமைப்புகளும் குரல் கொடுத்து வரும் இந்த சம யத்தில் எந்த ரூபத்திலும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால் அதை உறுதியுடன் எதிர்ப் போம் என சொன்ன அரசு தான் மத்தியிலும், மாநிலத் திலும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
.
திருமணங்களை பதிவாளர் அலுவலகங்களில் கட் டாயப் பதிவு செய்ய வேண்டும் என்பதை பிரச்சி னையாக்கி அதன் மூலம் தமிழ்நாடு அரசு பற்றி தவறான கருத்து வந்து விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக உள்ளோம்.
.
ஏனெனில் சிறிய விஷயம் கூட பெரிய பாதகத்தில் கொண்டு சேர்த்து விடும். எனவே, திருமணங் களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற சட்ட முன்வடிவை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி முஸ்லிம் ஷரீஅத் சட்டத்திற்கு எந்த வகையிலும் இது இடைஞ்சலாக இருக்காது என்ற ஐயப்பாட்டை போக்கி தேவைப்பட்ட திருத்தங்களை செய்து பின்னர் நிறைவேற்ற வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
.
தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான்
.
பதிவு செய்யும் முறை ஆங்கிலேய ஆட்சியின் போது 1886-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பிறப்பு, இறப்பு, திருமணங்களை பதிவு செய்வதற்கு இதன் மூலம் வழி ஏற்பட்டது.
'
திருமணங்களை பதிவு செய்வது 1973-ம் ஆண்டு கர்நாடகத்திலும், 1996-ம் ஆண்டு இமாச்சாலப்பிர தேசத்திலும் 2002-ம் ஆண்டு ஆந்திராவிலும் அமல்படுத்தப்பட்டது. ஜம்மு கஷ்மீரில் கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
'
அஸ்ஸாம், பீகார், மேகாலயா, ஒரிஸ்ஸா, மேற்குவங்க மாநிலங்களில் விருப்பப்பட்டால் பதிவு செய்யலாம் என உள்ளது. எகிப்து, பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் திருமண பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
'
நமது ஷரீஅத் சட்டம் மிகச் சிறந்தது. எல்லா மஹல்லாக்களிலும் ஷரீ அத் சட்டப்படியே இஸ் லாமியத் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஷரீஅத் சட்டப்படி திருமணங்கள் நடந்தாலும் அதை பதிவு செய்ய வேண்டும் என தற்போது அறிமுகப்படுத்தப்பட் டுள்ள சட்ட முன்வடிவு கூறுகி றது.
'
ஷரீஅத் சட்டப்படியே திருமணங்கள் நடந்தாலும் ஏழைப் பெண்கள் திருமண மோசடியிலிருந்து தடுக் கப்படுவதற்கு இந்த பதிவு முறை பலன் தரும்.
வங்கியின் நாமினேஷன், வாரிசு, கடவுச்சீட்டு போன்ற காரியங்களுக்கு பயனுள்ள ஆவணமாக இந்த பதிவு சான்றிதழ் அமையும்.
'
இருப்பினும் இந்த சட்ட முன்வடிவு சமுதாயத் தில் ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதால் முஸ்லிம் களின் மார்க்க அறிஞர்கள், சிறந்த வழக்கறிஞர்கள், பேராசிரி யர்கள், சமுதாயத் தலைவர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அறிஞர் பெருமக்களின் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து அரசுக்கு நம் கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம்.
'
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அப்துல் வஹாப்
'
திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது ஷரீஅத் சட்டத்திற்கு இடைய+றானது அல்ல. ஆனால் இந்த சட்ட முன்வடிவு முழுமை பெற வில்லை. விதி இல்லாததால் முழுமையாக அறிய முடியவில்லை. சட்டம் வந்ததற்குப் பிறகு விதி வரும்.
'
நாம் நம்முடைய திருமணங்களை பதிவு செய்ய அருமையான படிவம் வைத்துள்ளோம். அதையே அரசுக்கு மாதிரி படிவமாக அனுப்பி இதன்படி அமல் படுத்துங்கள் என கோரலாம்.
'
இமாம், ஜமாஅத் தலைவர், பெண்ணுக்கு திருமண சம்மதம் கொடுப் போர், மாப்பிள்ளை, சாட்சிகள் என அனைவரின் கையெழுத்துக்களும் இந்த படிவத்தில் இடம் பெறுகின்றன.
'
இந்த சட்டம் நம்மை பாதிக்காது என்றாலும் தலாக் பற்றிய விவரங்கள் பிரச்சினையை ஏற்படுத்தத் தான் செய்யும்.
'
விவாகரத்து என்பது இந்துக்களுக்கு நீதிமன்றத் தில்தான் முடியும். முஸ்லிம் களுக்கு அப்படியல்ல. இந்த சட்டத்தில் இதுபற்றி தெளிவு வேண்டும்.
ஏற்கனவே, நடைமுறையில் ஒப்புக் கொள்ளப் பட்ட விதிமுறைகளின்படி மனமுறிவு ஏற்பட்டால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற திருத்தம் ஏற்கப்பட வேண்டும்.
'
தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூ ர் அல்தாப்
'
சமுதாயத்தில் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடக் கின்ற இந்த சூழ்நிலையில் அத்தகைய அமைப்புக் களையெல்லாம் ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த ஆலோசனை கூட் டத்தை ஏற்பாடு செய்ததன் மூலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய வரலாறு படைத்துள்ளது-பாராட்டுகிறேன்.
'
கல்வியில் மேம்படுத்தப்பட்ட சமுதாயம் அல்ல முஸ்லிம் சமுதாயம். உலமாக்களால் நடத்தி வைக் கப்படுகின்ற திருமணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப் பட்டவை.
'
திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்பதை ஆதரித்தால் அது பேரழிவைத் தான் கொண்டு வரும். இது ஏழைகளை பாதிக்கும்.
பள்ளிவாசலிலும், மண்டபத்திலும் முடிந்து விடும் திருமணங்கள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்றால் உலமாக்கள், இமாம்கள் நடத்தி வைக்கும் திருமணங்கள் பதிவாளரால் நடத்தப்படும் நிலை ஏற்பட்டு விடும்.
'
சட்டமன்ற இந்திய தேசிய லீக் முன்னாள் உறுப்பினர் எம்.ஜி.கே. நிஜாமுத்தீன்
'
திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதை நம் மீது திணிக்கக் கூடாது. உச்சநீதிமன்றத் திற்கு முஸ்லிம்கள் யாரும் இந்த வழக்கை கொண்டு செல்லவில்லை. சீமா - அஸ்வினிகுமார் தம்பதியர் வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு பரிந்துரையை சொல்லி யது.
'
இப்போது தமிழக சட்டமன்றத்தில் முன் மொழியப் பட்ட சட்ட முன்வடிவை பல அம்சங்களில் நமக்கு பாதிப்பு வரும் நிலை உள்ளது. அதை விரிவாக ஆராய்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். அதுவரை அவசரப்பட்டு இதை சட்டமன்றத்திலே நிறை வேற்றாமல் சட்டமன்ற செலக்ட் கமிட்டிக்கு அனுப்ப முஸ்லிம் எல்.எல்.ஏக்கள் முயற்சிக்க வேண்டும்.
'
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எச். அப்துல் பாஸித்
'
ஷரீஅத்திற்கு பாதகம் ஏற்படும் என்ற நிலை வந்தால் எதிர்ப்பதை தவிர வேறு வழி இல்லை. ஆனால், காரியம் தான் தேவை. வீரியம் தேவை இல்லை. எனவே, திருமண கட்டாயப் பதிவு சட்ட முன்வடிவை நன்கு ஆலோசித்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
'
இன்று முஸ்லிம்கள் மஸ்ஜித், திருமண மண்டபங்கள் வீடுகளில் திருமணம் செய்கின்றனர். அவை அனைத்தும் பள்ளிவாசல்களில் பராமரிக்கப்படும் தப்தரில் பதிவு செய்யப்படுகிறது. அதை அப்படியே அங்கீகரிக்க வேண்டுமென முதல்வர் கலைஞர் இடத்தில் ஒரு ஐவர் குழுவாக சென்று சந்தித்து வலியுறுத்தலாம்.
'
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.
முஹம்மது ஜுனைது
'
உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது என்பதற்காக எல்லா சட்டத்தையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நம்முடைய தனியார் சட் உரிமை எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்.
'
எனவே, திருமண கட்டாய பதிவு சட்டத்தை நிறைவேற்றுவதை தற்காலிகமாவது நிறுத்தி வைத்து, முஸ்லிம் தனி சட்டத்திற்கு பாதகம் ஏற்படுமா என ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
'
இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச் செயலாளர் எஸ்.எம்.
ஹிதாயத்துல்லாஹ்

'
திருமணங்கள் பதிவு கட்டாயம் என்ற சட்டம் இந்துக்களுக்கு தேவை. ஆனால், முஸ்லிம்களைப் பொறுத்தவரை 1400 ஆண்டுகளாக இருக்கக்கூடிய சட்டத்தின் அடிப்படையில் திருமணங்கள் நடைபெறு கின்றன.
'
திருமணப்பதிவு என்பது அவசியம்தான். பாஸ்போர்ட், உள்ளிட்ட தேவைகளுக்கு திருமண சான்றிதழ் தேவைப்படும். பள்ளிவாசல்களில் உள்ள திருமண பதி வில் காஜியிடம் கையெழுத்து பெற்று அந்த சான்றிதழ் களை சட்டப்படி அரசு அங்கீகரிக்கலாம்.
'
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் பிரிவு
அமைப்பாளர் வெ. ஜீவகிரிதரன்

'
திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டமே பொது சிவில் சட்டத்திற்கான முதல்படி தான். முஸ்லிம் தனியார் சட்டத்தில் இது அப்பட்டமாக கை வைப்பதாகும்.
'
இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 25 மற்றும் 26 ஆகியவை மத நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகளாக்கி யிருக்கிறது.
'
அதன்படி இந்தியர்கள் எவரும் தான் விரும்பிய மதத்தை ஏற்றுக் கொள்ளவும் நடைமுறைப் படுத்தவும் அதனை பரப்பவும் அடிப்படை உரிமைகளைப் பெற்றவர்கள்.
'
இந்த அடிப்படை உரிமைகளின் மீது நீதித் துறை கை வைக்க இடம் அளித்தால் நம்முடைய தனிச் சட்டத்தையே நாம் இழந்து விடுவோம்.
'
இன்று திருமண கட்டாய பதிவு சட்டம் என்பார்கள். நாளை சொத்துரிமைக்காக சட்டம் கொண்டு வருவார் கள். பின்னர் வாரிசு உரிமைகளுக்கான சட்டம் வரும்.
'
கடைசியில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ள ஒவ்வொரு அம்சமும் பறிபோய் பொது சிவில் சட்டத்தில் கொண்டுபோய் விட்டு விடும்.
'
மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் அ.ச உமர் பாரூக்
'
பொது சிவில் சட்டத்தை முஸ்லிம்கள் எப்படி எதிர்க்கின்றார்களோ அது எந்த ரூபத்திலும் நுழைந்து விட வாய்ப்பு ஏற்படுத்தும் சட்டங்களையும் நாம் எதிர்த்தே தீர வேண்டும்.
'
மேலோட்டமாகப் பார்த்தால் இந்த சட்டம் தேன் தடவிய தோட்டாவாக உள்ளது. எனவே, மதமாற்ற தடை சட்டத்தை எப்படி எதிர்க்கிறோமோ அப்படி இதனையும் எதிர்க்க வேண்டும்.
'
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் புதிய சட்டம் என்பது தேவைப்படுகின்ற ஒன்று அல்ல. இன்று இந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பாராட்டுகிறேன்.
'
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா செய்தித் தொடர்பாளர் மௌலானா கே.எம். இல்யாஸ் ரியாஜி
'
எத்தனையோ ஆண்டு காலம் அரசாட்சி செய்து வந்த ஸ்பெயினில் முஸ்லிம்கள் துடைத்தெறியப்பட்ட தற்கான முதல்படி அங்கு கொண்டு வரப்பட்ட திருமண பதிவு சட்டம்தான்.
'
இன்று தாடி வைத்தால் தாலிபான்கள், முஸ்லிம் பெண்கள் பர்தா அணியக்கூடாது என்றெல்லாம் சர்வ சாதாரணமாக சொல்லத் துணிந்து விட்டனர்.
'
பொது சிவில் சட்டம் கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நாம் மிகுந்த விழிப்போடு பிரச்சினைகளை அணுக வேண்டும்.
'
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது, மாநிலச் செயலாளர் கமுதி பஷீர், உலமாக்கள் அணியின் அமைப்பானர் மவ்லவி ஹாமித் பக்ரீ, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் எஸ்.எம். சிக்கந்தர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் பிரஸிடென்ட் ஏ.அபுபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கப் பொறுப்பாளர் முஹம்மது ஹனீபா, சென்னை மாவட்ட சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவரும், வக்ஃபு வாரிய உறுப்பினரு மான எம். சிக்கந்தர், சுன்னத் ஜமாஅத் ஆன்மீகப் பேரவைத் தலைவர் மவ்லானா தேங்கை சர்புத்தீன் மிஸ்பாஹி, தமிழக சட்டமன்ற முன்னாள் இணைச் செயலாளர் வழக்கறிஞர் நாகூர் மீரான், பேராசிரியர் டாக்டர் சையது ரஃபீக் அஹமது ஆகியோரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
'
இந்தியா சுதந்திரமடைந்த சமயத்திலேயே அடுக் கடுக்கடுக்கான பல சோதனைகளுக்கு நாம் ஆளா னோம். அதில் ஒன்று, ஹஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட் என்ற சிறப்பு திருமணச் சட்டம் அன்று காயிதெ மில்லத் அவர்களின் உணர்ச்சிமிக்க வழிகாட்டுதலில் சமுதாயம் எழுப்பிய உரத்த குரலால் முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
'
இன்று திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பார்கள். அதில் நமக்கு என்ன ஆபத்து என்று கேட்கலாம். பதிவாளர் அலுவலகங்களின் பதிவு செய்யப்பட்ட திருமணம் எதையும் வெளியில் விவா கரத்து செய்வது ஏற்க முடியாதது@ அதை நீதி மன்றங்கள்தான் முடிவு செய்யும் என அடுத்த அறிவிப்பு வரும்போதுதான் இதன் ஆபத்து தெரியும்.
'
பெண்ணின் திருமண வயது 21 என்றுதான் அரசு இப்போது விளம்பரம் செய்து வருகிறது. 18 வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்ய முடியாது என்ற நிலை வந்தால் என்ன செய்வது? சரி. 18 வயதிலேயே திருமணம் செய்கிறோம் என்றாலும் மணப்பெண் 18 வயதை அடைந்திருப்பாள் என்பது சந்தேகம் என பதிவாளர் மறுத்தால் அப்பெண்ணிற்கு பள்ளிக்கூட சான்றிதழோ, பிறப்புச் சான்றிதழோ இல்லையென்றால் என்ன நிலை?
'
வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள் ஒரு மாத விடுமுறையில் ஊர் வந்து பெண்ணுக்கு திருமணம் முடித்து திரும்பலாம் என்றால் இந்த சங்கடங்களை எப்படி சந்திப்பது? வறுமையின் காரணமாக ஊர் கடந்து ஊர் வாழ்கின்றவர்கள் எங்கே போய் சான்று தேடுவது? என்ற கருத்துக்களையெல்லாம் அந்த கூட்டத்தில் நான் எடுத்து வைத்தேன்.
'
இறுதியில், தமிழக அரசின் இந்த மசோதாவை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி சிறுபான்மை மக்களின் ஐயப் பாட்டை நீக்கும் வகையில் வேண்டிய திருத்தங் களை செய்து பின்னர் நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை கேட்டுக் கொண்டு ஏகமதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'
இந்த தீர்மானத்தை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதே முஸ்லிம் சமுதாயத்தின் விருப்பமாகும்.
'

Tags: சமுதாயப் பார்வையில் ஒரு சட்ட மசோதா திருமணம்

Share this